பெங்களூரு சிறுமி பலாத்கார வழக்கு : பள்ளித் தலைவர் கைது

bangaloreபெங்களூரில் பள்ளி ஊழியர்களால் 6 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த பள்ளியின் தலைவர் கர்நாடக மாநிலக் காவலதுறைனரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய்கிழமை மாலை ருஸ்டம் கேரவாலா எனும் அவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த வார இறுதியில் அந்தப் பள்ளியில் பணிப்புரியும் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

அவரது மடிக் கணினியில் அநாகரீகமான வகையில் குழந்தைகள் தொடர்பான காணொளிகள் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பாலியல் வல்லுறவு சம்பவம் கடந்த ஜூலை மாதம் 2ஆம் தேதி அன்று நடந்துள்ளது. எனினும் பல நாட்களுக்கு பின்னரே பெற்றோர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.

‘இந்திய தண்டனைச் சட்டம், சிறார் நீதிச் சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் சட்டம் ஆகிய சட்டங்களின் பல பிரிவுகளின் கீழ் விப்கயார் உயர்நிலைப் பள்ளியின் தலைவர் ருஸ்டம் கேரவாளா கைது செய்யப்பட்டுள்ளார்,’ என பெங்களூர் காவல் துறை ஆணையர் எம்.என்.ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்

இந்தக் குற்றச்சாட்டை அந்தப் பள்ளி நிர்வாகம் கையாண்ட முறை தொடர்பில் பெற்றோர்களும் ஆர்வலர்களும் போராட்டம் நடத்திய சில தினங்களுக்கு பிறகே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு பெற்றோரிடம் மன்னிப்பு கோரிய பள்ளி தலைவர், காவல்துறை விசாரணைக்கு பள்ளி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று முன்னதாக தெரிவித்திருந்தார்.

எனினும் அந்தப் பள்ளியை முற்றுகையிட்ட கோபமான பெற்றோர்களில் பலர் அங்கு குழந்தைகளுக்கு சிறந்த பாதுகாப்பு இருப்பதாக உத்தரவாதம் அளிக்கப்படும் வரை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாது என்று தெரிவித்திருந்தனர். -BBC

TAGS: