தமிழக மீனவர்களும் அவர்களது குடும்பங்களும் இலங்கை கடற்பரப்புக்கு சென்று சரணடையப் போவதாக தெரிவித்துள்ளனர்.
தம்மீது தொடர்ந்தும் இலங்கை கடற்படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அத்துடன் கைதுகளும் இடம்பெறுகின்றன.
இதன்காரணமாக தமது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் எதிர்வரும் 28 ஆம் திகதியன்று மாவட்ட நிர்வாகியை சந்திக்கப் போவதாக கூறியுள்ள மீனவர்கள் அவரிடம் தமது மீன்பிடி அனுமதிகளையும் ஆவணங்களையும் கையளிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஆகஸ்ட் 2ஆம் திகதியன்று மீனவர்களும் அவர்களின் குடும்பங்களும் படகுகளில் வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டவாறு இலங்கை கடற்படையினரிடம் சரணடையப் போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்போதாவது தமது வாழ்க்கையை அமைதியாக கொண்டு செல்லமுடியும் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
என்ன கொடுமை இது.துரோக இந்தியாவோடு தமிழ்நாடு இருக்கும் வரை தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியாது.தனி தமிழ் நாடு அமைத்து போராட வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டோம்.