தமிழ்நாடு சட்டப்பேரவையில் போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சவை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துப் பேசுவதற்கு அவர் என்ன இந்திய அரசின் பிரதிநிதியா? என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில்,
பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று இலங்கை சென்று ராஜபக்சவை சந்தித்து பேசியுள்ளது.
இந்த சந்திப்பின் போது இலங்கையுடன் நல்லுறவையே இந்திய பிரதமர் நரேந்திரமோடி விரும்புகிறார் என்றும், தமிழக குரல்கள் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றும் ராஜபக்சவிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான குழு தன்னிச்சையாக சென்றதா? அல்லது பா.ஜனதா கட்சியே அனுப்பி வைத்ததா? அல்லது மத்திய மோடி அரசு அனுப்பி வைத்ததா? என்ற கேள்விகளுக்கு விடை எதுவும் இல்லை.
இந்திய அரசின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு குறித்து பேச சுப்பிரமணியன் சுவாமி யார்? அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? மத்திய அரசு இந்த விவகாரத்தில் இன்னமும் மௌனமாக இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சவை சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான பா.ஜனதா குழு எப்படி சந்திக்க முடிந்தது? அப்படியானால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய மோடி அரசு புறக்கணிக்கிறதா? என்பதற்கான விடை தெரிய வேண்டும்.
இந்தியாவில் கடல் ஆராய்ச்சி மையங்களை நிறுவுவது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமியிடம் ராஜபக்ச பேசுவதற்கு அவர் என்ன இந்திய அரசின் பிரதிநிதியா?
இலங்கை சென்ற சுப்பிரமணியன் சுவாமி குழு பற்றி மோடி அரசின் கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் இந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தமிழக பா.ஜனதா கட்சி ஆகியவை கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? இது பச்சைத் தமிழின துரோகம் அல்லவா?’’என்று கூறியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய வேண்டும்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை
அண்மையில் இலங்கைக்கு சென்ற பாஜக குழுவிற்கு சுப்பிரமணியன் சுவாமி தலைமை தாங்கி இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து பேசி உள்ளார்.
ஊடகங்களில் வந்துள்ள செய்தியின் அடிப்படையில் சுப்பிரமணியன் சுவாமி தமிழகத்தை பற்றி கவலைப் படவேண்டாம், இந்திய அரசு இலங்கை அரசுக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஆதரவை தரும் என்று உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.
தமிழர் தரப்பில் இருந்து ஒருவர் கூட இலங்கைக்கு செல்லாத நிலையில் பாஜக குழு இலங்கை சென்றுள்ளது. இந்த குழுவிற்கு ஏன் சுப்பிரமணியன் சுவாமி தலைமை தாங்கினார் என்பது தெரியவில்லை . சுப்பிரமணியன் சுவாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் அல்ல, இவர் அரசு அதிகாரியும் அல்ல. அப்படி இருக்கும் போது இவரை அரசு சார்பில் எப்படி இலங்கைக்கு அனுப்ப முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.
மேலும் இலங்கைக்கு சென்று ராஜபக்சவிடம் தமிழகத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். இந்திய அரசு இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையில் இலங்கைக்கு முழு ஆதரவு அளிக்கும் என்று கூறியுள்ளார்.
இது தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானத்திற்கும், தமிழக அரசின் இறையாண்மைக்கும் எதிரான நிலைப்பாடாகும். இந்திய ஒன்றியத்தில் தான் இன்றுவரை தமிழகம் உள்ளது. அப்படி உள்ள நிலையில் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழக அரசின் தீர்மானத்திற்கும் எதிராக சுப்பிரமணிய சாமி பேசியுள்ளது தமிழக அரசின் இறையாண்மைக்கு எதிரான செயலாக கடுதப்படுகிறது.
இறையாண்மை என்பது இந்திய அரசுக்கு மட்டுமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கும் இருக்கிறது என்பதை சுப்பிரமணியன் சுவாமி உணராமல் தமிழர்களுக்கு எதிராக இப்படி பேசியுள்ளார்.
மேலும் அவருடைய சமூக வலைத்தளங்கள், ட்விட்டர் பக்கங்களில் தமிழர்களை பொறுக்கிகள் என்றும், தமிழீழ விடுதலைப் போராளிகளை எலிகள் என்றும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அரசியலைக் கடந்து இனப்படுகொலை செய்த ராஜபக்சவுடன் இவர் நெருக்கமாக உள்ளார் என்றும் தெரிகிறது.
தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கையுடனான உறவை இந்திய அரசு துண்டிக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய நிலையில், சுப்பிரமணியன் சுவாமி இலங்கையுடன் நல்லுறவை பேணவே இந்திய அரசு விரும்புகிறது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து ஈழத் தமிழர்களுக்கும், தமிழக தமிழர்களுக்கும் எதிராகவே செயல்படும் சுப்பிரமணியன் சுவாமியை பாஜக தங்கள் கட்சியில் இருந்து நீக்க வேண்டும். அப்படி நீக்காவிட்டால் காங்கிரஸ் கட்சி எப்படி தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டதோ அவ்வாறே பாஜகவும் தமிழர்களால் புறக்கணிக்கப்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு எதிராகவும், தமிழர் உணர்வுகளுக்கு எதிராகவும் செயல்படும் சுப்ரமணியன் சுவாமியை தமிழக அரசு உடனே கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழ்நாடு) கோரிக்கை விடுத்துள்ளது.
இன்றா? நேற்றா? என்றுதான் தமிழ் நாட்டு சட்ட சபையின் தீர்மானங்களை இந்திய நடுவண் அரசு பொறுப்பேற்று நடவடிக்கை எடுத்துள்ளது?சொந்த நாட்டு மீனவர்களின் பிரச்சனையிலும் சரி ஈழத் தமிழர் பிரச்சனையிலும் சரி எத்தொனையோ தீர்மானங்களை தமிழ் நாட்டு சட்டப்பேரவை நிறைவேற்றியது.அத்தனையும் இந்திய நடுவண் அரசைப் பொறுத்த வரை அதிகாரப்பூர்வமற்றவைதான்.தமிழ் நாட்டின் எட்டப்பன் இந்த பூணுல் போட்ட சுப்ரமணியன்.அனைத்துலக கொலை குற்றவாளியான ராஜபக்சேயை இவன் சந்தித்ததால் இவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் இதற்குமுன் மோடியும் கேடியும் அதிகாரப்பூர்வமாக அந்தக் கொலை வெறியனை தனது நாட்டிற்கே வரவழைத்து அலாவளாவினார்களே அதற்கு அவர்களை என்ன செய்ய வேண்டும்?
தமிழ் நாட்டில் சட்டா சபையில் தீர்மானித்து அந்த அயோக்யனை கொதிக்கும் சுண்ணாம்பில் தூக்கி போடுங்கள் இதுதான் சரியான தீர்ப்பு !!!!!!!!!!
பாரதீயா ஆஸ்தீகன்,தமிழரோ நாஸ்தீகன்(திராவிடன்).நீர் பிராமணரை கொச்சையா பேசினா அவனும் அப்படிதான்,ஒரு படத்துல சிம்பு சொல்வான் நான் கண்ணாடி மாதிரின்னு நாராயண நாராயண.
பொதுவா சுப்பிரமணியன் சுவாமிக்கு ஒரு பேர் உண்டு . பைத்தியக்கர அரசியவாதின்னு . சரியாய் செயல் படுறான் .
இந்த ஆளு (சுப்பிரமணியன்) அளவுக்கு அதிகமா தமிழர்களை கொச்சை படுத்துகிறான்.