தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை நாட்டம் காட்டவில்லை: ஜெயபால்

fishing-talkமீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கம் நாட்டம் காட்டவில்லை என தமிழக மீன்பிடித்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை எட்ட தமிழக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. எனினும், இலங்கை அரசாங்க அதிகாரிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

தமிழகத்தில் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட போதிலும், இலங்கையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.

தமிழக மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக்கொள்ள கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கச்சத்தீவு குறித்த நிலைப்பாடு சரியானதே என ஜெயபால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி 10000 தமிழக மீனவர்கள் கால வரையில்லா பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

TAGS: