இலங்கையில் இருந்து தமது உறவினர்களை விடுவித்து தருமாறு இராமநாதபுர மக்கள் கோரிக்கை

tamilnadu_fishermen_001தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற தமது உறவினர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டமையை அடுத்து அவர்களை விடுவித்து தருமாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுமார் 50 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் நாகப்பட்டிணத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அதில் 11 பேர் இராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று அவர்கள் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் பாதுகாப்பு குறித்து தாம் அச்சம் கொண்டுள்ள நிலையில் அவர்களை விடுவித்து தருமாறு உறவினர்கள் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகியிடம் கோரிக்கை மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

இந்திய மீனவர்களைக் கைது செய்யத் தயார் – சிறீலங்கா கடற்படையினர் அறிவிப்பு

sri lanka navyசிறீலங்கா அரசாங்கத்திடம் தஞ்சம் கோரி சிறீலங்கா வரவுள்ள இந்திய மீனவர்களை கைது செய்வதற்கு தயாராக இருப்பதாக சிறீலங்காக் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

அதற்காக நாளைய தினம் முதல் கச்சத்தீவு கடற்பரப்பில் விசேட பாதுகாப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன என கடற்படைப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

முன்னதாகவும் தமிழக மீனவர்கள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

இந்த நிலையில் தற்போது அவர்கள் அறிவித்ததைப் போல வெள்ளைக் கொடிகளுடன் சிறீலங்காவுக்கு வருவார்களாக இருந்தால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: