இலங்கையின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலிதாவைப் பற்றி அவதூறான செய்தி வெளியானதைக் கண்டித்து இன்று திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுள்ளனர்.
சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு எதிரில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரையுலக நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது இலங்கைக்கு எதிரான கோஷங்களை திரையுலகத்தினர் எழுப்பினர்.
“தாயைப் பழித்தவனை தரணியை ஆண்டாலும் விடமாட்டோம்”, “உலகம் போற்றும் தமிழர் தாயை பழிக்க நினைக்காதே நீ கொச்சைப்படுத்த நினைத்தது தமிழக முதல்வரை அல்ல 10 கோடி தமிழர்களின் தாயை”, “தேசப் பிதா என்றால் காந்தி பெரியார் என்றால் ஈவெரா அம்மா என்றால் எங்க முதல்வர்தான்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அவதூறு கட்டுரை விவகாரம்: மக்களவையிலும் எதிரொலி
இலங்கை அரசு இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான கட்டுரை வெளியிடப்பட்ட விவகாரம் இன்று மக்களவையிலும் எதிரொலித்தது.
மக்களவை அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, அவையில் இந்த விவகாரத்தை எழுப்பி உரையாற்றினார்.
இலங்கை அரசின் இந்த மோசமான செயலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், இலங்கை அரசுக்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் கடும் கோஷம் எழுப்பினர். இதனால் அவையை நண்பகல் 12.30 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
இது குறித்து பதிலலித்த அவைத் தலைவர் தனபால், இலங்கை அரசு இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிடப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவித்துள்ளார்.
இலங்கை அரசு இணைய தளத்தில் வெளியான அவதூறு கட்டுரைக்கு அந்நாட்டு அரசு மன்னிப்புக் கோரி, இணையதளத்தில் இருந்தும் அந்த கட்டுரை நீக்கப்பட்டு விட்டது.
இந்த விடயம் குறித்து தமிழக கட்சிகள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளதால், அவையில் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
அம்மா பசி தாயே பசி ,பிச்சை போடுங்கம்மா ,,டேய் போயி வளைய பாருங்கட ,என்னோமோ உங்க ஆத்தாள அவதுறா பெசிட்டாப்ப்ள ,,போங்கடா போங்கடா ,அம்மா ,இலங்கை மக்கள் கொள்ளும் பொது எங்கடா போனா உங்கம்மால ..?
தமிழன் ஒரு நல்ல காரியம் செய்து இருகான்
வரவேற்போம்
. அம்மா அம்மா அம்மா என்று
சொல்லும்
பொழுது
நமக்கு
ஒரு உண்மையான
மனிதபம்
அம்மா பாசம்
வருகிறது.
அம்மா , அம்மா , அம்மா
என்றும் நலமுடன் VALKA
நடிகர்கள், நடிகைகள் நன்றாக நடிப்பார்கள்….
தோழர் யா கருணா சிறந்த பண்பாளன் , மனிதநேய மாமணி , பெண்களை தாயாக மதிப்பவர் !!!!!!!!!!!!!! அவரை பத்தி செஇதிசொல்லுன்கப்பாஆஅ
ஆரியர்களின் வேதத்தை மலத்திற்கு ஒப்பிட்டுப் பேசியது மட்டுமல்ல.மேலும் நீலகேசி சொல்கிறார்.
“தோற்றமும் நாற்றமும் சுவையுடன்
ஊறு இவற்றால் தொடங்கி
ஆற்றவும் ஆயிரு வேதம் வல்லார்கள்
அஃது அறிந்து உரைப்ப
மேற்குலத்தாரோடு இழிந்தவர்
என்பது மெய்ம்மை பெறா
நூல் செய்தவர் திறம் அறிகுவர்
நுழைந்தறிவு உடையவர்”
மலத்தை எடுத்து அதன் நிறம், மணம், சுவை எனும் தன்மைகளை எல்லாம் மருத்துவ வல்லுநர்கள் ஆய்வுசெய்தால் அதைக் கழித்தவனுக்கு ஏதாவது வியாதி இருக்கிறதா? இல்லையா?என்பதை அறியலாம்.ஆனால் இதைக் கழித்தவன் மேல்சாதிக்காரனா?அல்லது கீழ்சாதிக்காரனா? என்று அறியவே முடியாது.அப்படி உங்கள் வேத்தைக் கொண்டு அதைச் செய்தவர் அறிவுடயவரா?அறிவுஇல்லாதவரா என்பதை அறியலாம்.எனினும் அவர் மேல் சாதி அல்லது கீழ்சாதியா என்பதை மட்டும் அறிய முடியாதே.
இப்படிப்பட்ட சாதி எதிர்ப்பு,மூடநாம்பிக்கை ஒழிப்பு என எல்லாவகையான முற்போக்கு இலக்கியங்களையும் தன்னகத்தே கொண்ட தமிழ்மொழியை காட்டுமிராண்டி மொழி என்றும்,சனியன் பிடிச்ச மொழிஎன்றும் வந்தேறி கன்னட வெங்காய ராமசாமி சொன்னது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.