பிரதமர் மோடி ஆற்றிய உரையில், மரணத்தை கண்டு எனக்கு பயமே கிடையாது என்று ஒரு ராணுவ வீரன் கூறுகிறான் என்றால், ஒன்று அவன் பொய் சொல்ல வேண்டும், அல்லது அவன் நேபாளியாக இருக்க வேண்டும்.
இந்தியாவுக்காக ரத்தம் சிந்த நேபாள மக்கள் ஒருபோதும் தயங்கியதே இல்லை. நேபாளிகளின் ரத்தம் சிந்தாமல் எந்த போரிலும் இந்தியா வென்றதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியா – நேபாளத்துக்கிடையிலான பிணைப்பு இமய மலையைப் போலவும், கங்கையாற்றினைப் போலவும் மிகவும் பழமையானது என்றும் இதன் மூலம் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் நாம் பரிமாறிக் கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.