ஜெயலலிதா அவதூறு விவகாரம்: இலங்கைத் தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம்

Sushmaஜெயலலிதா பற்றி அவதூறான கட்டுரையை பிரசுரித்தமைக்காக இலங்கைத் தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி இலங்கை அரசின் அதிகார பூர்வ இணையத்தளத்தில் அவதூறுக் கட்டுரை வெளியானது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

இந்த நிலையில் இலங்கை இந்தியாவிடம் மன்னிப்புக் கோரி கட்டுரையையும் இணையத்தில் இருந்து நீக்கியது.

இதனிடையே நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இலங்கைத் தூதரை நேரில் அழைத்து கண்டம் தெரிவிக்க வேண்டும் என அ தி மு க கோரிக்கை விடுத்தது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் சுஷ்மா ஸ்சுவராஜ் இலங்கைத் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிப்பதாக உறுதியளித்தார்.

உறுதியளித்தது போல் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் டில்லியில் உள்ள இலங்கைத் தூதர் சுதர்ஸன் சேனவிரத்னவை நேற்று மாலை நேரில் அழைத்து தமது கண்டனத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அவரிடம் இலங்கை விவகாரங்களைக் கவனிக்கும் மத்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் சுசித்ரா துரை, இந்தியாவின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்தார்.

இதன்படி “இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கை பாதுகாப்புத் துறை இணையதள விவகாரம் தொடர்பாக கடும் அதிருப்தி, கண்டனம் ஆகியவற்றை உங்களிடம் முறைப்படி மத்திய அரசு பதிவு செய்கிறது’’.

இத்தகைய செயல்களில் இனி ஈடுபடக் கூடாது என்று உங்கள் நாட்டு அரசிடம் கூறுங்கள்’ என்று சுசித்ரா துரை தெரிவித்தார்.

இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு வருத்தப்படுகிறேன்: இந்தியாவிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய மஹிந்த

ஜெயலலிதா தொடர்பாக இலங்கை அரச இணையத் தளத்தில் கட்டுரை வெளியானதற்கு மஹிந்த ராஜபக்ச வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீனவர் பிரச்சினை தொடர்பாக கடிதம் எழுதுவதை விமர்சித்து இலங்கை பாதுகாப்புத் துறை இணையத்தில் அவதூறுக் கட்டுரை வெளியானது.

இதற்கு பல எதிர்ப்புக்கள் கிளம்பியது.  இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியிடமும் முதல்வர் ஜெயலலிதாவிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக இலங்கை அரசு தெரிவித்தது.

தொடர்ந்து, இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்திய மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச “இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு வருத்தப்படுகிறேன். இவ் அவதூறுக் கட்டுரை தொடர்பாக அறிக்கை கோரியிருக்கிறேன்” என கூறினார்.

TAGS: