இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடைய அல்-உம்மா பயங்கரவாதிகள் கைது

இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி உட்பட 4 அல் உம்மா பயங்கரவாதிகள் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி அம்பத்தூர் எஸ்டேட்டில் சுரேஷ்குமார்  கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே குத்புதீன், காஜாமொய்தீன், நசீர் மற்றும் ஒரு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையில் தொடர்புடைய மேலும் சிலர் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று பெங்களூரு விரைந்த தனிப்படை விவேக் நகரில் 4 பேரை கைது செய்தது. அவர்கள் அல் உம்மா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் சலீம், சமியுல்லா, சாதிக், நவாஸ் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சமீம், நவாஸ் ஆகியோர்  சுரேஷ்குமாரை அரிவாளால் வெட்டிக் கொன்றவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

கொலை செய்துவிட்டு பெங்களூருவில் கடந்த 3 மாதங்களாக பதுங்கியிருந்த 4 அல் உம்மா பயங்கரவாதிகளும் விசாரணைக்காக சென்னை கொண்டு வரப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

TAGS: