ரயில்வேயில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு; ராஜ்யசபாவில் அமளி ஒத்தி வைப்பு

railபுதுடில்லி: ரயில்வே மற்றும் பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீடு கொண்டு வரும் முயற்சிக்கு காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் கடும் அமளி நிலவியது. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இது போல் மிசோரம் கவர்னர் கமலா பெனிவால் நீக்கம் தொடர்பாகவும் அவையில் காங்., கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டது. காங்,. கட்சியை சேர்ந்த எம்.பி. அஜய்மக்கான் இது தொடர்பாக கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார். ஆனால் கவர்னர் நீக்கத்தில் அரசியல் எதுவும் இல்லை என்றும் , அரசியலமைப்புக்குட்பட்டுத்தான் இந்த நீக்கம் நடந்துள்ளது என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் 100 சதம் நேரடி அன்னிய முதலீட்டுக்கும், பாதுகாப்பு துறையில் 49 சதவீதம் அன்னிய முதலீட்டுக்கும் மத்திய அரசு நேற்று ஒப்புதல் வழங்கியது. இவ்வாறு நிதி பெற்றால் தான் நஷ்டத்தில் செல்லும் ரயில்வே துறையை தூக்கி நிறுத்த முடியும் என அரசு நம்புகிறது. ஆனால் இதற்கு காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்., ஆட்சி காலத்தில் இது தொடர்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது அப்போது எதிர் கட்சியாக இருந்த பா.ஜ., இதனை எதிர்த்து குரல் கொடுத்தது. ஆனால் ஆளும் கட்சியாக மாறிய பா.ஜ., அன்னி முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்குவது ஏன் ? இது இரட்டை வேஷம் அல்லவா என காங்., கட்சியை சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

TAGS: