திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நகைகள் மதிப்பீட்டு பணி நிறைவு

Tamil_News_204764962197திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் பத்மநாபன் சுவாமி கோவிலில் ‘ஏ’ என்ற ரகசிய அறையில் கிடைத்த தங்கத்தினால் ஆன மணிகள், சுவாமி சிலைகள், குடங்கள் உள்ளிட்ட பொற்குவியல்களின் மொத்த மதிப்பு ரூ.2.50 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் ‘ஏ’ அறையில் உள்ள விலை உயர்ந்த நவரத்தின கற்கள், வைரம் மற்றும் வைடூரியம் போன்ற கற்கள் பதிக்கப்பட்ட தங்க கிரீடங்கள் மற்றும் தங்க முத்து மாலைகள் போன்றவை மதிப்பீடு செய்யப்படாமல் உள்ளன. இவை அனைத்தும் சிறந்த முறையில் பெட்டியில் அடைக்கப்பட்டு பாதுகாப்புடன் ‘ஏ’ ரகசிய அறையில் மீண்டும் வைக்கப்பட்டுள்ளன.

விலைஉயர்ந்த நகைகள் வைக்கப்பட்டுள்ளதால் ‘ஏ’ அறை சர்வதேச பாதுகாப்பு தரத்துடன் அமைக்கப்பட்டது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 6 ரகசிய அறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ரகசிய அறையில் தங்கள், வெள்ளி, வைரம், ரத்தினம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன.

இந்த நகைகள் குறித்த விவர பட்டியலை தயாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதிகளடங்கிய குழு சார்பில் கணக்கீடு பணிகள் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

TAGS: