திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் அம்பத்தூரில் சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அப்துல் சமீம், அப்துல் ஹக்கீம் சாதிக் பாஷா, அபுதாகீர், சையத் அலி நவாஸ் முகமது, சமிமுல்லா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் திருவள்ளூர் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே 6 பேரையும் போலீசார் அடித்து காயப்படுத்தியதாக புகார் கூறி வக்கீல் புகழேந்தி திருவள்ளூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி 6 பேரையும் திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து 6 தீவிரவாதிகளையும் கூடுதல் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் 200–க்கும் மேற்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூவர் அரசு மருத்து வமனைக்கு அழைத்து வந்தனர்.
அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. தீவிரவாதிகள் அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.