டீத் தூளில் பூச்சிக் கொல்லி மருந்துகள் : க்ரீன் பீஸ் நிறுவன ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

இந்தியாவின் முன்னணி தேயிலை உற்பத்தி நிறுவனங்களின் டீ தூளில் உயிரைக் கொல்லும் பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாக க்ரீன் பீஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்திய தேயிலைகள் உலக நாடுகளிடையே புகழ்பெற்றது. அதில் பூச்சி மருந்துகள் கலந்திருப்பது ஒருவர் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அதனால் பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படும். எனவே, தேயிலை உற்பத்தி நிறுவனங்கள் தாமாக முன்வந்து பாதுகாப்பான தேயிலையை உற்பத்தி செய்ய வேண்டும் என்று க்ரீன் பீஸ் அமைப்பின் இந்தியாவுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத் தலைவர் நேஹா செய்கல் வலியுறுத்தியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில்ளித்துள்ள இந்திய தேயிலை வாரியம், க்ரீன் பிஸ் அமைப்பு கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை, ஒவ்வொரு தேயிலை பாக்கெட்டும் நன்கு பரிசோதிக்கப்பட்ட பிறகே விற்பனைக்கு வருகிறது. நுகர்வோரை பாதுகாக்கும் வகையிலேயே தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

TAGS: