லே: போர் காலத்தை விட பயங்கவரவாதத்திற்கு ஏராளமான இந்திய வீரர்கள் பாதிக்கப்படுகின்றனர். பாகிஸ்தான், இந்தியாவுடன் நேரடி போரை நடத்த முடியாது. இதற்கு திராணி இல்லாததால் அந்நாடு பயங்கரவாதம் என்ற பெயரில் மறைமுக போரை நடத்துகிறது. இதனை பாகிஸ்தான் அரசும் ஊக்குவிக்கிறது. இது கண்டனத்திற்குரியது. இவ்வாறு பிரதமர் பேசினார். முன்னதாக எல்லை பாதுகாப்பு வீரர்களிடம் கலந்து பேசினார். அவர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.
லே -லடாக் : இந்தியா- பாகிஸ்தான் போர் நடந்த கார்கிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றார். இதன் மூலம் 1999 ல் நடந்த போருக்கு பின்னர் இந்த பகுதிக்கு செல்லும் ஒரே பிரதமர் என்ற பெயரும் மோடிக்கு கிட்டுகிறது. நிமோ-பாஸ்கோ, லெஹ்-ஸ்ரீநகர் என 2 ஹைட்ரோபவர் நீர் மின் திட்டத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இவரது பேச்சு ராணுவ வீரர்களுக்கு பூஸ்ட்டாக அமையும் என ராணுவ வட்டாரம் எதிர்பார்க்கிறது.
இன்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் காஷ்மீர் லே பகுதி சென்றடைந்தார். இங்கு ராணுவ அதிகாரிகள் பிரதமரை வரவேற்றனர். கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து அவர் உலகின் உயர்ந்த சியாச்சின் பகுதிக்கு செல்கிறார். ஜம்மு பகுதியில் பாக்., படையினர் தொடர்ந்து எல்லை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நேரத்தில் பிரதமர்மோடியின் பயணம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஜம்மு வில் பயங்கவரவாத தாக்குதல்: இதற்கிடையில் இன்று காலை ஸ்ரீநகர் அருகே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற கான்வாயில் இந்த தாக்குதல் நடந்தது. இதில் 7 வீரர்கள் காயமுற்றனர்.
எரிசக்தி, சோலார், சுற்றுலா : நீர் மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: லே பகுதிக்கு நான் பார்லி., தேர்தல் துவங்கிய காலத்தில் இருந்து வர வேண்டும் என நினைத்து விருப்பத்துடன் இருந்தேன். லே பகுதி மக்கள் பலம் வாய்ந்தவர்கள் அன்பு மிக்கவர்கள். இந்திய குடிமக்களின் முன்மாதிரியாக உள்ள லே மக்களின் தேச பக்திக்கு நான் தலைவணங்குகிறேன். இப்பகுதி மக்கள் தேவைகள் குறித்து நான் அறிந்து வைத்திருக்கிறேன். எனது நோக்கமே எரிசக்தி, சோலார், சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதே. இவை முன்னேற்றம் அடையும் போது இந்த பகுதி வளர்ச்சி பெறும். இங்கு வரும் இந்த மின் திட்டங்கள் லே பகுதியில் சுற்றுச்சூழல் கெடுதல் விடுதலை பெறும். லே பகுதி குஜராத்தின் கட்ஜ் போன்று சோலார் எரிசக்தி மேம்படுத்தும் பகுதியாக வளம் பெற்றுள்ளது. லே பகுதி வளர்ச்சி அடைய நாங்கள் முழு துணையாக இருப்போம். வாஜ்பாய் காலத்தின் கனவுகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். முன்னாள் பிரதமராக இருந்தவர்கள் இங்கு வரவில்லை. நான் 2 முறை ஜம்மு காஷ்மீர் வந்துள்ளேன்.
நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் பெரும் இடையூறாக இருந்து வந்தது. ஊழலை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என உங்களிடம் கேட்டு கொள்கிறேன். ஊழல் ஒழிப்போம் என்று ஆட்சிக்கு வந்துள்ளோம், இதனை நிறைவேற்றுவோம். ஊழலுக்கு எதிராக போராடி வெற்றி பெறும் போது வறுமையில் வாழும் மக்களை காப்பதில் வெற்றி பெற முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
எங்கிருந்தாலும் தாவூத் இப்ராஹிமை கைது செய்வோம்: ராஜ்நாத் சிங் உறுதி
புதுடில்லி:தாவூத் இப்ராஹிமை கைது செய்ய மத்திய அரசு அனைத்து முயற்சியும் எடுத்துவருகிறோம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.300க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய 1993 ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் சூத்திரதாரியாக இருந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தான் உளவுத்துறையின் ஆதரவுடன் அங்கேயே வசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானின் அபோட்டாபாத் பகுதியில் அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதலில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தானில் இருந்து தப்பியோடிய தாவூத் இப்ராஹிம் தற்போது துபாயில் இருப்பதாகவும் உறுதிப்படுத்த முடியாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பார்லிமென்ட்டில் உள்துறை அமைச்சகம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், தாவூத் இப்ராஹிமை கைது செய்ய மத்திய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. எங்கிருந்தாலும் நாங்கள் கைது செய்வோம் என்று தெரிவித்தார்.
யோசித்து பேசுங்கள். உங்கள் “பலம் பொருந்திய” இராணுவம் சீனாக்காரனுடன் 2 வாரங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது. ஏன் இந்தக் குறை? களைய முயலுங்கள். இந்தியர்கள் அதிகம் பேசுகிறீர்கள்; சீனர்கள் கமுக்கமாக அதிகம் செய்கிறார்கள். இது ஒரு பெரும் வித்தியாசம்.