ஊழலுக்கு எதிராக போர் அனைவரும் பங்கேற்க மோடி அழைப்பு

லே : நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஊழலை ஒழிப்பதற்காக அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஊழலுக்கு எதிரான இந்த போரில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு நேற்று சென்றார் பிரதமர் மோடி. நிமோ பாஸ்கோ நீர் மின் திட்டம் மற்றும் லேகார்கில்ஸ்ரீநகர் மின்வழித் தடம் ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்து, அவர் பேசியதாவது:ஊழல், நமது நாட்டின் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. இதனால் மக்கள் மிகக் கடுமையான கோபத்தில் உள்ளனர். ஊழலை தடுக்க, ஒடுக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என்ற உறுதியை அளித்து கொள்கிறேன்.

ஊழல், நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. ஊழலுக்கு எதிராக முழு பலத்துடன் கடுமையாக போரிட இந்த அரசு உறுதியுடன் உள்ளது. நானும் லஞ்சம் வாங்க மாட்டேன். மற்றவர்களையும் வாங்க விடமாட்டேன்.இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும். ஊழல் தடுப்பு அமைப்புகள், அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள், நேர்மையான அதிகாரிகள், பொதுமக்கள் உதவியுடன் ஊழலை ஒடுக்க முடியும். நாட்டில் பல நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம். ஊழலுக்கு எதிரான போரில் நாம் வென் றால்தான், வறுமையை ஒழிக்க முடியும் என்றார்.

TAGS: