மோடியின் சுதந்திர தின உரை: நாட்டின் வளர்ச்சியை புதிய உயரத்துக்கு எடுத்துச் செல்வோம்

நாட்டின் 68வது சுதந்திர தினமான இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிவைத்து தனது முதல் சுதந்திர தின உரையாற்றுகிறார்.

அப்போது அவர் நான் பிரதமராக அல்லாமல் முதல் ஊழியனாக பாடுபடுவேன். மக்களால்தான் நாடு வலுவடைந்ததே தவிர அரசியல்வாதிகளால் அல்ல நாம அனைவரும் ஒன்று இணைந்து பாடுபட வேண்டும். பிரதமர், தலைவர்கள் அரசு எதையும் செய்யவில்லை. விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மடாதிபதிகள், விஞ்ஞானிகள்  போன்றவர்களால் தான் வளர்ச்சியை நாம் கண்டிருக்கிறோம்.

இந்ந நாள் நம் தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் நாள் நமக்கான உத்வேகத்தை கொடுக்கும் நாள். நாட்டின் வளர்ச்சியை புதிய உயரத்துக்கு எடுத்துச் செல்ல உறுதியெடுக்கும் நாள் இந்தியா சுதந்திரம் அடைய தங்களை தியாகம் செய்த அனைவருக்கும் வணக்கம், மரியாதை செலுத்தும் நாள். என்று கூறினார்.

முன்னதாக தமர் நரேந்திர மோடி, ராஜ்காட்டில் உள்ள மாகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.  செங்கோட்டை சுற்றி மூன்று கிலோமீட்டர் பரப்பளவில் முற்றிலும் சுகாதாரமாகவும், மோப்ப நாய்கள் மத்திய பாதுகாப்பு நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.பாதுகாப்பு படையினர் செங்கோட்டை சுற்றி எட்டு கிலோ மீட்டர் சுற்றளவில் ஒவ்வொரு மூலையிலும் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

கடந்த ஆண்டை விட பாதுகாப்பு படையினரை மிகவும் கூடுதலாக பயன்படுத்த மத்திய அரசை கேட்டு கொண்டிருக்கிறது  பிரதமரில் அரசு இல்லத்திலிருந்து 10 கிலோ மீட்டர் பயணம் பாதை காலை முதல் மாலை வரை சி.சி.டி.வி., கண்காணிப்பின் கீழ் இருக்கும்.சுதந்திர தினத்தை முன்னிட்டு நகரம் முழுவதும் வார இறுதிநாள் வரைக்கும் உயர்எச்சரிக்கை பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

TAGS: