பீடி -சிகரெட்டுக்கு தடை வருமா ? நோட்டீஸ் அனுப்பியது சுப்ரீம்கோர்ட்

cigarபுதுடில்லி: நாட்டில் பீடி- சிகரெட் விறபனைக்கு ஏன் தடை விதிக்க கூடாது என்ற வழக்கில் விளக்கம் கேட்டு மத்திய , மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பீடி, சிகரெட் பொது இடங்களில் புகைக்க கூடாது என கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் உள்ள இடத்தில் சிகரெட் விற்பனைக்கு தடைகள் இருந்தும் தாராளமாக விற்கப்பட்டு வருகின்றன. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிகரெட் விற்க கூடாது என்றும் தடை இருக்கிறது. ஆனால் இதுவும் முறையாக பின்பற்றப்படுவதில்லை. சிகரெட் காரணமாக ஆண்டுக்கு பல லட்சம் பேர் கேன்சரால் மாண்டு வருகின்றனர்.

இது போன்ற கெடுதல்களில் இருந்து விடுதலை பெற நாட்டில் பீடி, சிகரெட்டுக்கு முழு தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது இது தொடர்பாக இறுதி முடிவு செய்யப்படும்.

புகைப்பிடிப்பவர்களுக்கு இனி திண்டாட்டம் வந்து சேரும். புகை பொருட்கள் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும் என்பதை உற்பத்தியையும் நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

TAGS: