பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் – ஜெட்லி

pakiபுதுடெல்லி, ஆக 18- பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி எல்லையில் உள்ள இந்திய ராணுவம் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றது. இன்று மட்டும் 20 இடங்களை நோக்கி தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் இன்று மத்திய ராணுவ மந்திரி அருண் ஜெட்லி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தரஸ் எல்லைக்கோடு அருகே சென்று பார்வையிட்டார். தேரா பாபா நானக் அருகே ராணுவ வீரர்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுடன் கலந்துரையாடினார்.

அதன்பின், இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தானின் எந்தவித தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

கடந்த 10 நாட்களில் மட்டும் 11 தடவை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் பேச்சுவார்த்தை ரத்து

பாகிஸ்தானுடன் வெளியுறவுத்துறை செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்தது.

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காஷ்மீர் பிரச்சினை, எல்லையில் நடக்கும் அத்துமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளருடன் வரும் 25-ம் தேதி இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதை ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் தூதரிடம் சுஜாதா சிங் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.

TAGS: