ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எந்த தகுதியுடன் இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்தார் என்பதை தெளிவுப்படுத்தவேண்டு;ம் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசாங்கத்தை கோரியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பி எஸ் ஞானதேசிகன், இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கையில் போருக்கு பின்னர் புனர்நிர்மாணம் மற்றும் மீள்குடியேற்றம் என்ற அடிப்படையில் அந்த நாட்டுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றபோது சுப்பிரமணிய சுவாமி எந்த அடிப்படையில் இலங்கை ஜனாதிபதியை சென்று சந்தித்தார்.
அவருடைய தகுதி அவருடைய பதவி என்ன என்பதை மத்திய அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஞானதேசிகன் கேட்டுக்கொண்டார்.
சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றுக்கையிலேயே இந்த கேள்விகளை அவர் தொடுத்தார்.