டெல்லியில் பேசிய பிரதமர் மோடி, பாதுகாப்பு துறையில் புதிய தொழில்நுட்பத்துக்கு முக்கிய பங்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், உலகம் மிக வேகமாக மாறி வருகிறது, போர் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அளவீடுகளும் மாறி வருகின்றன. தொழில்நுட்பம் இதில் முக்கிய உந்து சக்தியாக மாறிவருகிறது.
உலகம் ஒரு விஷயத்தை 2020ம் ஆண்டில் முடித்தால் நாம் அதை 2018ல் செய்து முடிக்க வேண்டும்.
இந்தியாவை உலக வல்லரசாக்க, பாதுகாப்பு ஆராய்ச்சியில் நம் நாட்டு விஞ்ஞானிகள் அதிக முக்கியத்துவம் அளித்து, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.
மேலும், இதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் நவீன ஆயுதங்கள் உள்ள நாடு போரில் வெற்றி பெறுவது எளிதான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மூன்றுப்பக்கமும் எதிரிகளாக தொல்லைகொடுதுக்கொண்டே
இருக்கிறார்கள்.(பாக்கிஸ்தான் , சீனா , உறவாடி கெடுக்கும் நண்பனாக ஸ்ரீலங்கா)இந்த
மூவரையும் ஒழிக்காமல் இந்தியா எப்போது வல்லரசாகமுடியும் ? உங்கள் வல்லமையை
இவர்களிடம். காட்டுங்கள்.
வல்லரசாமாம்! பக்கத்துக்கு நாடுகள் பயந்து நடுங்கிர போறார்கள்!