மன்மோகன் மீது வழக்கு தொடர அனுமதி

manmohan-singh01வாஷிங்டன்: ‘பிரதமராக மன்மோகன் சிங் இருந்த காலகட்டத்தில் அவர் மீது அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாத அளவிற்கு தடையாணை இருந்தது. அவர் நிதியமைச்சராக இருந்த காலகட்டத்திற்கு அத்தகைய சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது’ என, அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில், 1980ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சீக்கிய தீவிரவாதம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில், ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.அந்த பிரச்னைகளை இப்போது எழுப்பி, அமெரிக்க நீதிமன்றங்களில், அமெரிக்காவாழ் சீக்கியர்கள், வழக்கு தொடர்ந்து வருகின்றனர். 1984ல் நடைபெற்ற சீக்கியர் படுகொலை, அந்த காலகட்டத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் மீது, நியூயார்க் மற்றும் வாஷிங்டன் நகர கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இதில், சில வழக்குகளில், சோனியா, மன்மோகன் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியாது என கோர்ட் மறுத்தாலும், விடாப்பிடியாக, வேறு வேறு விவகாரங்களில் வழக்குகளை தொடர்ந்து வருகின்றனர்.

அதில், ‘நிதியமைச்சராக மன்மோகன் இருந்தபோது, சீக்கியர்களை ஒடுக்க ஏராளமாக நிதியுதவி செய்தார்’ என்ற குற்றச்சாட்டை தெரிவித்து, அவர் மீது, வாஷிங்டன் நகரின், கொலம்பியா சிட்டி கோர்ட்டில் வழக்கு, கடந்த ஆண்டு தொடரப்பட்டது.அந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது குறித்து, நீதிபதி, ஜேம்ஸ் போஸ்பர்க், ”அமெரிக்க சட்டங்களின் படி, ஒரு நாட்டின் தலைவர் பதவியில் இருப்பவர்கள் மீது, வழக்கு தொடர தடையாணை உள்ளது; நிதியமைச்சராக இருக்கும் போது மேற்கொண்ட செயல்களை, அமெரிக்காவில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியும். அத்தகைய சிறப்பு அதிகாரம், அமைச்சர்களுக்கு
கிடையாது,” என்றார்.

TAGS: