ஜம்மு : இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது. இதில் நேற்று (ஆகஸ்ட் 22)நள்ளிரவு முதல் நடைபெற்று வரும் பயங்கர தாக்குதலில் பொது மக்கள் 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சர்வதேச எல்லையான ஆர்.எஸ்.புராவை ஒட்டிய இந்திய எல்லைப் பகுதியில், நேற்று இரவு 22 இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி உள்ளன. அப்பகுதியை ஒட்டிய பல்வேறு கிராமங்களிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையும், தந்தையும் பலியாகி உள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடந்த 16 நாட்களில் இந்திய பாதுகாப்பு நிலைகளை குறித்து, பாகிஸ்தான் படைகள் 16 முறை தாக்குதல் நடத்தி உள்ளன. கடந்த 3 மாதங்களில் 25க்கும் அதிகமான முறை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது. பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் படைகள் இந்திய எல்லை பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் படைகளின் தொடர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் காரணமாக சர்வதேச எல்லையை ஒட்டிய ஆர்.எஸ்.புராவை அடுத்த 3 கிராமங்களில் வசித்த சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
இந்திய எல்லை பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் நடத்தி வரும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் ஒருபுறம் இருக்க, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத குழுக்கள் சிலவும் இந்திய எல்லைக்குள் ஊடுவி வருகின்றன. வடக்கு காஷ்மீரின் குப்வரா மாவட்டம் ஜலோரா பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்திய ராணுவத்தினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்று வருகிறது.
சுமார் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இவர்கள் அனைவரும் லக்ஷர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என உளவுத்துறை தெரிவித்துள்ளது.
எல்லையில் பாக்.,சுரங்கபாதை? சந்தேகிக்கிறது இந்திய ராணுவம்
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எல்லைப்பகுதியான அக்னுார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து சுரங்கப்பாதை அமைத்துள்ளதை இந்திய ராணுவம் கண்டுபிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,நாங்கள் எல்லைப்பகுதியில் உள்ள சாக்லா ராணுவ முகாம் சுற்றுவட்டாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக குகை பள்ளத்தாக்கு போன்று ஓரு பகுதி வளைந்து சென்றது.
அங்கு சென்று பார்த்தபோது, இச்சதிவேலையில் பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்திருப்பாதாக உணர்ந்தோம். அடுத்த கணமே நாங்கள் யோசித்த போது கடந்த ஜூலை 22ல் இவ்வழியாக வந்துதான் அப்போதைய தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனவும் அந்த சம்பவத்தில் ஒரு ஜவான் பலியானதும் தெரியவந்ததாக அவர் கூறியள்ளார்.
ராணுவம் சந்தேகம்:சந்தேகத்தில் அடிப்படையில் ராணுவ பொறியாளர்கள் மற்றம் ராணுவ தொழில்நுட்ப வல்லுனர்கள் நேரடியாக அந்த குகை பள்ளத்தாக்கில் ஆய்வு செய்தனர்.ஆனால் இதுவரை எந்த அறிகுறியும் தெரியவில்லை என அப்போது தெரிவித்தனர்.
பின்னர் நடத்திய ஆய்வில் ஜூலை 27, 2012 அன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள முகாம் அருகே அருகே,இரண்டு மூன்று இடங்களில் ஒரு குகை போன்ற வழி மட்டும் தென்பட்டதாக தெரிவித்தனர்.அந்த பகுதி சுரங்கம் 3க்கு 3 என்ற அடியாக இருந்தது.குகை போன்ற அப்பகுதி தென்பட்டது மிகுந்த ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.