மது குடிப்பது எங்கள் கலாச்சாரம்: கோவா பா.ஜ. துணைத்தலைவர் பேச்சு

drunkenபானாஜி: மது குடிப்பது கோவா மாநில கலாச்சாரம் அதற்காக நாங்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என கோவா மாநில பா.ஜ. மூத்த தலைவர் பேசியுள்ளார்.

கேரள அரசின் அதிரடி முடிவு : கேரளாவில் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. குஜராத் மாநிலத்தில் பல ஆண்டுகளாக பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. குஜராத் வழியை பின்பற்றி கேரள மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பை முதல்வர் உம்மன் சாண்டி வெளியிட்டார். இந்த அறிவிப்பு கேரள பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து கேரளா வழியை கோவா மாநிலமும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மதுகுடிப்பது எங்கள் கலாச்சாரம் : இந்நிலையில் கோவா மாநிலத்தில் பா.ஜ. தலைமையிலான முதல்வர் மனோகர் பாரிக்கர் ஆட்சி நடக்கிறது. இம்மாநில பா.ஜ. துணைத்தலைவர் வில்பர்ட் மெஸ்கூயிட்டாவிடம் கேரள அரசின்முடிவு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்து பேசுகையில், மது குடிப்பது எங்கள் மாநிலத்தின் கலாச்சாரம் எங்கள் மாநிலத்தில் திருமணம் மற்றும் இதர விஷேச நிகழ்ச்சிகள் எது நடந்தாலும், அதை கொண்டாட மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம்.இற்காக நாஙகள் கேரளா அரசு அறிவித்தது போன்ற பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதற்கு அவசியமும் இருக்காது . இவ்வாறு அவர் பேசினார்.

பூரணமதுவிலக்கை அமல்படுத்திய மாநிலங்கள்
மிசோரமில் – 1995
குஜராத் – 1960
மணிப்பூர் -1999
நாகாலாந்து -1990
அரியானா -1995-1998
ஆந்திரா – 1957-69

TAGS: