ஈழத் தமிழர் விவகாரத்தில், தமிழர்களை விட ராஜபக்சவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர் என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கை தமிழர் விவகாரத்தில் பாஜக அரசு, ஐநா தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியண் சுவாமி மற்றும் சிலர் இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகின்றனர்.
பாஜக தலைவர்கள் தமிழர்களை விட ராஜபக்சவுக்குதான் விசுவாசமாக உள்ளனர்.
இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை தான் பாஜக பி்ன்பற்றுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை இலங்கை தமிழர்கள் சுய கௌரவத்துடன் வாழ தொடர்ந்து குரல் கொடுக்கும். என்றார் நல்லகண்ணு.
என்னக் காரணம்?! ஈழத் தமிழர்கள் பள்ளியில் தமிழ் மொழி படிக்காமல் இந்தி படிப்பதாக சொன்னால் BJP அவர்களை ஆதரிக்கும். அவர்கள் எல்லாம் முஸ்லிம்களாக மாறினால் பாகிஸ்தான் உட்பட எல்லா முஸ்லிம் நாடுகளும் அவர்களுக்குக் குரல் கொடுக்கும்.
இங்கே முடிவு எடுக்கவேண்டியவர்கள் தமிழ் நாட்டு தமிழர்கள்தான்; தமிழகம் இந்தியாவிற்குள் இருக்க வேண்டுமா ?என்று.
பி.ஜே.பி,அரசு தமிழக தண்ணீர் பிரச்சனையால் இனி தனி தனி மாணில அந்தஸ்தை கேன்ஸல் செய்து ஒரே இந்தியாவை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்.காரணம் விவசாயத்தின் முக்கியத்துவம்.நாராயண நாராயண.