தமிழ்வழி கல்வி வலியுறுத்தி குமரி அனந்தன் தலைமையில் திருச்சியில் உண்ணாவிரதம்

kuதிருச்சி மாவட்ட தமிழ் இயக்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று நடந்தது. குமரி அனந்தன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத் தை அருட்தந்தை அமுதன் அடிகள் துவக்கி வைத்தார்.

தமிழை பயிற்றுமொழியாகக் கொண்டு பயின்றவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்புகளை முழுமையாக வழங்க வேண்டும். தொடக்கக் கல் வியில் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாக்குவதை நீக்க வேண்டும். ஆங்கிலவழிக் கல்வியால் குழந்தைகளின் கற்கும் திறனும், அறிவு வளர்ச்சியும் பாதிக்கும்.

 எனவே, தமிழ்மக்கள் ஆங்கில வழிக்கல்வி மோக த்தைக் கைவிட்டு தமிழ்வழிக்கல்வியை பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகள் தமிழை மொழிப்பாடமாக ஏற்க மறுப்பதற்கு கண்டனம். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைக் குழுவின் தேர்வுகளில் இந்தியாவின் அரசிய லமைப்புச் சட்டம் ஏற்றுக் கொண்டுள்ள தமிழ்மொழி யில் தேர்வு மற்றும் வினாத்தாள்கள் அமைய வேண்டும்.

மத்திய அரசு சமஸ்கிருத மொழிக்கு அளிக்கப்படும் நிதியுதவியைப் போல் உயர்தனிச் செம்மொழியாம் தமிழுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் தொடர்ந்து மூடப் பட்டு வருகின்றன. போதிய கழிப்பறைகளும், அடிப் படை வசதிகளும் இல்லா மையே இதற்குக் காரணம். இந்த நிலை தொடரா வண்ணம் உடனடியாகத் தமிழக அரசு, அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அடிப் படை வசதிகளை முழுமையாகச் செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் ராச வேலர் செண்பக தமிழரங் கம், திருக்குறள் கல்வி மையம், கரூர் தமிழ்சங்கம், திருச்சி மாவட்ட எழுத்தா ளர் சங் கம், உலகத்தமிழ்ச்சங்கம், தமிழ் தேசிய பொதுவு டைமை கட்சி, தமிழ்நாடு தமிழ்வழி பள்ளி நிர்வாகிகள் கூட்டமைப்பு திருச்சி தமிழிசை சங்கம் உள்பட அனைத்து தமிழ்ச்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் புலவர் முருகேசன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

உண்ணாவிரதத்தில் 20க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளும், தமிழறிஞர்களும், தமிழ் மொழிப்பற்றாளர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

kumari ananthan

TAGS: