உயர் கல்வி நிறுவனங்களின் தரம் கவலையளிக்கிறது: பிரணாப் முகர்ஜி

“சர்வதேச தரத்துடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களின் தரம் கவலையளிக்கும் விதமாக உள்ளது’ என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

மேற்கு வங்க மாநிலம், ஹெüரா மாவட்டத்தில் உள்ள ஷிவ்பூரில், நாட்டின் முதல் இந்திய பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.இ.எஸ்.டி) ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

அதன் தொடக்க விழாவில் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:

இந்தியாவில் பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்கள் 720, கல்லூரிகள் 37,000 உள்ளபோதும், சர்வதேச அளவில் ஒப்பிடும்போது, அவற்றின் தரம் குறைவாகவே உள்ளது.

சர்வதேச தரவரிசையில் முதல் 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவில் இருந்து ஒன்று கூட இடம்பெறவில்லை என்று பிரணாப் முகர்ஜி பேசினார்.

TAGS: