இந்தியாவில் அதிவேக ரயில்கள் மார்க்கெட்டை பிடிக்க ஜப்பான், சீனா போட்டி

bullad trainபுதுடில்லி: இந்தியாவில் அதிவேக ரயில் நெட்வொர்க் மார்க்கெட் பிடிக்க ஜப்பானும் சீனாவும் மீண்டும் போட்டியில் குதித்துள்ளன.
அகமதாபாத்-மும்பை நடைபாதையில் ஷின்கான்சென் நெட்வொர்க் ஆய்வு பணியை ஜப்பான் ஏற்கனவே துவக்கி வைத்துள்ளது.பணியின் முடிவுகளை பிரதமர் நரேந்திர மோடி வார இறுதியில் ஜப்பான் செல்லும் போது அவருடன் பகிர்ந்து கொள்ள ஜப்பான் ஏற்பாடு செய்துவருகிறது. ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே,அதிவேக ரயில் நெட்வொர்க் பணிகளை வாங்க இந்தியாவிடம் பெற வலுவான அடித்தளம் போடவேண்டும் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.பிரதமர் மோடி கியோட்டோ சென்றதும் டோக்கியோவுடன் ஷின்கான்சென் திட்டத்தை இணைக்க அதற்கான அடித்தளம் போட காத்து கொண்டிருக்கிறார் அபே.

மோடி அரசின் வைர நாற்கர ரயில் திட்டம்:

ரயில்வே துறை முற்றிலும் நவீனமயமாக்க வைர நாற்கர திட்டம் என்ற பெயரில், அதிவேக ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அதிவேக ரயி்ல்கள் திட்டம்:

ஆமதாபாத்-மும்பை,டில்லி-ஆக்ரா,டில்லி-சண்டிகர்,மைசூர்-பெங்களூரு-சென்னை,மும்பை-கோவா மற்றும் ஐதராபாத்-செகந்திராபாத் வழிகளில் அதிவேக ரயில்களை இயக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கு ஒவ்வொரு அதிவேக ரயிலின் விலை ரூ.60,ஆயிரம் கோடிக்கு விற்க சீனா-ஜப்பான் போட்டிபோட்டு வருகிறது.

இந்தவேளையில் சீனாவிடம் உலகின் மிக நீளமான அதிவேக ரயில் நெட்வொர்க் உள்ளது.அதன்படி, தங்கள் ரயில்களை இந்தியாவிற்கு விற்க ஆர்வமாக சீனா உள்ளது.சீன அதிபர் ஷி ஜின்பிங்,செப்டம்பர் மாதம் இடையில் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.அப்போது இது குறித்து முக்கிய முடிவு எடுக்க இருக்கிறார்.சீனா, குறைந்த செலவில் அதிவேக ரயில்களை இந்தியாவிற்கு தர தயாராகி வருகிறது. அதேவேளையில் ஜப்பான், சிறந்த தரத்துடன் பாதுகாப்பு தன்மை கொண்டதாக இந்தியாவிற்கு விற்க தாயார்படுத்தி வருகிறது.

TAGS: