ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று 2வது நாளில் டோக்கியோ சென்றுள்ளார். ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர், அந்நாட்டு பிரதமர் ஆகியோரை சந்தித்துப் பேசினார். டோக்கியோவில் நடைபெற்ற வர்த்தக சபை கூட்டத்தில் கலந்து கொண்டும் நரேந்திர மோடி பேசினார்.
நரேந்திர மோடி பேசுகையில், 2020ல் தொழில்திறனில் மேம்பட தற்போதிருந்தே நமது திறமைகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஜப்பானோடு இணைந்து செயல்பட்டால் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும். நாட்டில் அமைதியை கொண்டுவர ஜப்பானும் இந்தியாவும் முழுவீச்சில் பாடுபடுகிறது. முதலில் ஆசிய நாடுகளில் அமைதியைக்கொண்டு வர பாடுபடுவோம். பின்னர் உலக அளவில் அமைதியை கொண்டுவர முடியும் என்றார்.
இதைத்தான் 1965ல் பேரறிஞர் அண்ணா சொன்னார். தமிழன் சொன்னால்தான் எவனும் கேட்கமாட்டானே… அதையே மற்றவன் சொன்னால்… ஆகா… இதுவல்லவா பேச்சு! இவரைப்போல் யாரால் முடியும்!? என்ன அறிவு! எத்துனை முற்போக்கான சிந்தனை! என்று ஏத்திட தவரார்கள்.