இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் உயர் நீதிமன்றம் இந்துக் கோயில்களில் ஆடுகளை பலியிட விதிக்கப்பட்ட தடையை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளாக அனுசரிக்கப்படும் உயிர்பலி நிகழ்வுகளை, காட்டுமிராண்டித்தனமானது என்று சாடியுள்ள நீதிபதிகள், மாநிலத்தில் உள்ள கோயில்களில் உயிர்பலி கொடுப்பது தடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கோயில்களில் மட்டுமல்லாது, கோயிலை ஒட்டிய இடங்களிலும் யாரும் ஆடுகளை பலியிடக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இதுபோன்ற பலி நிகழ்வுகள், அப்பாவி மிருகங்களுக்கு வலியையும் வேதனையையும் உருவாக்குவதால் ஆண்டுதோரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது என்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
காலத்துக்கு ஏற்றபடி மக்களின் சமயப் பழக்கங்களும் மாற வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த உத்தரவு தமது சமய நம்பிக்கைகளில் குறுக்கிடம் செயல் என்று பலி சடங்கை ஆதரிப்போர் கூறுகின்றனர். -BBC
மூட நம்பிக்கையில் முழுவதும் மூழ்கி உள்ளவர்கள், தங்கள் மத போதனையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் தாங்கள் சார்ந்துள்ள மதத்திற்கே இழிவை ஏற்படுத்தும் காட்டுமிராண்டிகள் செய்யும் அரகாஜம். நல்ல முடிவு. உன்னவேண்டுமானால் வீட்டில் செய்துகொல்ல வேண்டியதுதானே? ஏன் சாந்தம் தவழவேண்டிய சந்நிதானத்தில் இக்கொடூரக் கொலை?1