பாரதிய ஜனதாக் கட்சியின் இரட்டை வேடம்: எதனை நம்பி வாக்களிப்பதென ஜெயலலிதா கேள்வி

jayalalitha2தமிழக மீனவர் பிரச்சினை விடயத்தில் பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கம் இரட்டை வேடமிடுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதால், தமிழக மக்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்பட போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள தூத்துக்குடி மேயர் தேர்தலுக்கான பிரசாரத்தின்போதே ஜெயலலிதா இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பில் மத்திய அரசாங்கத்திலும் மாநில அரசாங்கத்திலும் வேறுபட்ட கொள்கைகளை கொண்டவர்கள் இருக்கும் போது அந்த தேசிய கட்சி ஒன்றுக்கு ஆதரவு வழங்குவதால் எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை.

தூத்துக்குடி, அதிகளவில் மீனவர்களை கொண்ட பிரதேசமாகும். மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.

பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில தலைவர்கள், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.

எனினும் தேசிய ரீதியில் அந்தக் கட்சியின் தலைவர் ஒருவர் தமிழக மீனவர்களுக்கு எதிராக செயற்படுவதாக ஜெயலலிதா சுட்டிக்காட்டினார்.

ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை கோடிட்டே அவர் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தினார்.

இவ்வாறான நிலையில் தமிழக மக்கள் எவ்வாறு பாரதிய ஜனதாக்கட்சி என்ற தேசியக் கட்சிக்கு வாக்களிக்க முடியும்? என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.

TAGS: