இந்திய கரையோரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகளும் பொலிஸாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர்.
இலங்கையின் ஊடாக தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுறுவக் கூடுமென புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் கடற்படையினர் க்யூப் பிரிவு பொலிஸார் விசேட பொலிஸ் பிரிவு மாவட்ட பொலிஸ் பிரிவு மீன்பிடி மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன இணைந்து புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் இணங்கியுள்ளன.
கடலில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் புலனாய்வு தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்கில் இந்த சகல தரப்பினரையும் உள்ளடக்கிய கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சுப்ரின்டட் என்.எம். மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
24 மணித்தியாலங்கள் கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலே சீன ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து, 200 இந்திய பாதுகாப்பு படையினரை சுற்றி வளைத்ததாக தகவல் வந்து கொண்டுள்ளது.
சுண்டைக்காய் ஸ்ரீ லங்கா தமிழ் நாட்டு மீனவர்களை கொன்றும் தினசரி பிடித்து கொண்டு எவ்வளவோ அட்டூழியம் செய்த போதிலும் இந்தியாவினால் ஒன்றும் செய்ய முடிய வில்லை — அத்துடன் கட்ச தீவை இந்திரா காந்தி தாரை வார்த்து தமிழ் நாட்டுக்கு அறிவில்லாமல் துரோகம் செய்து இன்றைக்கு தமிழ் மீனவர்கள் சிங்கலவன்களின் அடிக்கும் உதய் க்கும் ஆளாகி கொண்டிருக்கின்றனர் — என்ன மடத்தனம்? மற்ற நாடுகள் ஒரு அங்குலத்திற்கும் போருக்கு தயார் ஆகுகின்றன.