வாஷிங்டன்: 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர் பாபிஜிந்தால் போட்டியிட பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி என இரு பெரும் கட்சிகள் உள்ளன.
இக்கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர்கள் மாகாணம் தோறும் சென்று ஆதரவு திரட்டுவர். இந்நிலையில் அமெரிக்காவின் லுசியானா மாகாண கவர்னர் பாபி ஜிந்தால் (46), லூசியானாவின், நியூ ஹாம்ஸ்பியர் நகரைச் சேர்ந்த இவர் அமெரிக்க வாழ் இந்தியர். கடந்த 2003-ம் ஆண்டு கவர்னராக தேர்வு செய்யப்பட்டார். இளம் வயதில் கவர்னராக தேர்வு செய்யப்பட்டவர் என அழைக்கப்பட்டார். குடியரசு கட்சியைச் சேர்ந்த பாபி ஜிந்தால் வரும் 2016-ம் ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அவர் கூறுகையில், வாய்ப்பு வரும்பட்சத்தில் 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பேன். வரும் நவம்பரில் அமெரிக்காவின் காங்கிரஸ் என அழைக்கப்படும் பார்லிமென்டிற்கு தேர்தல் நடக்கிறது. அதன்பிறகு அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய உள்ளேன் என்றார்.
முன்னதாக சி.என்.என். டி.வி.சானல் கடந்த 8-ம் தேதி முதல் 1-ம் தேதி வரை மேற்கொண்ட கருத்து கணிப்பில் பாபிஜிந்தால் அதிபர் வேட்பாளராக போட்டியிட பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் ‘ஒரு ஈழ வம்சாவழித் தமிழர் அமெரிக்காவின் அடுத்த அதிபராக வர கூடும் ‘ என்ற செய்தி வெளிவந்து எல்லா உலகத் தமிழர்களையும் குளிர்ச்சிப் படுத்த வேண்டும்.கதிர்காம முருக கடவுள் அதற்கு அருள்புரிவானாக.