ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஆர்பாட்டத்தில் ஈடுபடுவோரதும் எங்களதும் இலங்குகள் ஒன்றே – முரளிதர ராவ்

முரளிதர ராவ்

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை வலியுறுத்தி தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்களதும், பாரதீயே ஜனதா கட்சியினதும் இலக்குகள் ஒன்றே என்று பாரதீயே ஜனதா கட்சியின் பொது செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

தற்போது கொழும்பில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அவரும், மற்றுமாரு பி.ஜே.பி. உறுப்பினரும் கொழும்பு வந்துள்ளனர்.

இதற்கு எதிராக தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

இது தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த இலக்கினை அடைவதற்காக பி.ஜே.பியும் தமிழக அரசியல் கட்சிகளும் கடைபிடிக்கின்ற அணுகுமுறைகள் வித்தியாசமானவை என்று முரளிதரராவ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்தது என்று, பாரதீயே ஜனதா கட்சி கருதுகிறது.

இதன் அடிப்படையில் தாம் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தமிழ் நாட்டின் எதிர்புகளை சமாளிக்கும் நோக்கிலேயே இந்திய மத்திய அரசாங்கம் இவ்வாறான சந்திப்புகளை ஒழுங்கு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

TAGS: