இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி. கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதும், உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டதும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் செயல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அது குறித்து ஏற்கனவே பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
இது குறித்து ஐ.நா.சபையில் தீர்மானம் வந்த போது மனித உரிமை மீறல் பிரச்சனை தொடர்பான விசாரணை செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இலங்கைக்கு சென்று முழு விசாரணை நடத்துவதற்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷே இன்று வரை அனுமதி தரவில்லை. அங்குள்ள தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் பிரச்சனையை தீர்ப்பதற்கோ, பாரபட்சமின்றி விசாரணை நடத்துவதற்கோ இலங்கை அதிபர் முன் வராதது என்பது அவரது மனிதாபிமானமற்ற செயலையே காட்டுகிறது.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கும், தமிழக மீனவர் பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு ஏற்படும் வரையில், மனித உரிமை மீறல் குறித்த விசாரணைக்கு உட்பட்ட இலங்கை அதிபர் ராஜபக்ஷே, ஐ.நா.வில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவது என்பது தமிழக மக்களின் ஒட்டு மொத்த உணர்வுகளுக்கு எதிரானதாகும்.
தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்போம் என்று தேர்தல் நேரத்தில் மோடியும், பா.ஜ.க.வும் வாக்குறுதி அளித்தார்கள். பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.
ஆனால் ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்கு மேலாகியும் மீனவர்கள் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. மீனவர்களை கைது செய்வதும், துன்புறுத்துவதும் அவர்களது வலைகளை அறுப்பதும், படகுகளை சிறைபிடிப்பதும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
மீனவர்களை விடுதலை செய்தால் மட்டும் போதாது, அவர்களின் வாழ்வாதாரமான படகுகளையும் இலங்கை அரசு திருப்பி தராமல் இருப்பது ஒரு புறம், மறுபுறம் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் செயலில் ஈடுபடுவதும் மிகுந்த கண்டனத்துக்குறியது. இது எந்த விதத்தில் நியாயம் என கேட்க விரும்புகிறேன். 10 படகுகளின் வலைகளை இலங்கை கடற்படை சேதப்படுத்தியிருக்கின்றது.
மத்திய அரசும் இதில் மெத்தன போக்கையே கடைபிடிப்பது என்பது தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு எந்த தீர்வும் ஏற்படவில்லை. இலங்கையில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு 13–வது அரசியல் சாசனப்படி, சிங்களர்களுக்கு உரிய அனைத்து உரிமைகளையும் வழங்கப்படாமல் மறுக்கப்படுவது என்பது இலங்கை இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.
இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம அந்தஸ்து, மறு குடியமர்த்துதல், இந்தியாவிலிருந்து இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்களை முழுமையாக வழங்கப்படாதது போன்றவை கண்டிக்கத் தக்கதோடு, மத்திய அரசும் இவற்றை கண்காணித்து நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் அப்போதைய பாரத பிரதமர் கலந்து கொள்ள கூடாது என்று தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நாங்கள் வேண்டுகோள் விடுத்த போது, அதில் அன்றைய பிரதமர் கலந்து கொள்ளாமல் இருந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மோடியைச் சந்திக்கும் மஹிந்த
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பு அடுத்த ஓர் இரு தினங்களில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 69 ஆவது பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் பொருட்டு நேற்று மாலை 6.40 அளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உளிட்ட தூதுக்குழுவினர் அமெரிக்கா நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.
நியூயோர்க்கில் நாளை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் 69 ஆவது பொதுச் சபை கூட்டத் தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 24 ஆம் திகதி உரையாற்றவுள்ளதாகவும் மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க விஜயத்தின் போது ஜனாதிபதி மேலும் பல நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஐ நா பொதுச் சபை மாநாட்டில் உரையாற்றிய பின்னர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாடு திரும்பவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்தார்.
தமிழர்களின் உணர்வுகளை வடநாட்டவர் வசம் உள்ள மத்திய அரசு மதித்ததாக இன்றுவரை சரித்திரம் இல்லை.இதில் இருந்து மீள வேண்டும் எனில் நாம் உணர்வால் ஒன்றுபட்டு நம் மக்களை வறுமை பிடியில் இருந்து முற்றிலும் விடுவிக்க வேண்டும்.நம் பொருளாதார பலம்
தமிழினத்திற்கு நம்பிக்கையை கொடுக்கும்.
மத்திய அரசு மீனவர்களுக்கு உதவி செய்ய வரவில்லை என்றல் மாநில
அரசு தன்னுடைய கடல் காவல் துறையை அனுப்பி மீனவர்களை காப்பாற்றலாம் அல்லாவா..அல்லது மீனவர்களுக்கு பாது துணையாக இருக்கலாம் அல்லாவா .அப்புறம் பாருங்க மத்திய அரசு என்ன செய்யும் என்ற…எல்லாம் நெஞ்சில் தில் இல்லாதவர்கள்
நம்பி வாக்களித்த தமிழ் ஆர்வலர்களுக்கு வழங்க படும் பரிசு,இவங்களை (பிஜேபி) விட காங்கிரஸ் எவ்வளவோ மேல்.