மீண்டும் சீன ராணுவம் அத்துமீறல்: இந்திய எல்லையில் 300 பேர் முகாம்

cccபுதுடில்லி:இந்திய எல்லையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் மீண்டும் இந்திய எல்லைகளை கடந்து அத்துமீறி நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக்கின் வடகிழக்கு பகுதியான சூமாரில் சீனா தன்னுடைய பகுதி என்று சொந்தம் கொண்டாடி வரும் இடத்தில் சுமார் 300 சீன ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இமாச்சலப்பிரதேசத்தில் இந்திய எல்லையின் கடைக்கோடி பகுதியான சூமார் எல்லையில் 7 கூடாரங்களை அமைத்து நூற்றுக்கும் அதிகமான சீன ராணுவ வீரர்கள் அவற்றில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை சீன விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் வீசி வருகின்றன.இந்தியா-சீனாவுக்கு இடையிலான லடாக்கின் சூமார் பகுதியில் கூடாரம் அமைத்திருந்த சீனப் படைகள் இந்திய ராணுவத்தின் எச்சரிக்கைக்கு பிறகு கடந்த இரு தினங்களுக்கு முன் பின்வாங்கியது. இந்த நிலையில் நேற்று மீண்டும் அத்துமீறி நுழைந்துள்ளது சீன ராணுவம்.

வான் எல்லையில் வட்டம்: எனினும், இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய வான் எல்லைக்குள் ஊடுருவாமல், சீன வான் எல்லைக்குள்ளேயே வட்டமிட்டு உணவுப் பொட்டலங்களை வீசி வருகின்றன.சீன அதிபருடன் எல்லை பிரச்சனை குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்திய நிலையிலும் எல்லையில் தொடர்ந்து சீனப் படையினர் அத்துமீறல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.காஷ்மீர் எல்லைப்பகுதியான லே யிலிருந்து 300 கி.மீ., தொலைவில் உள்ள சூமார் பகுதியில் நேற்று வாகனங்களில் வந்த சீன ராணுவத்தினர்களை இந்தியா ராணுவம் பலமுறை எச்சரித்தும் கூட இந்திய எல்லைக்குள் கூடாரங்களை அமைத்திருந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TAGS: