ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதம்: ஒபாமாவுடன் கூட்டணி சேர்வாரா மோடி?

obama_modi_001ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை ஒடுக்க இந்தியாவின் ஒத்துழைப்பை கோர அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை வேரோடு அழிக்க ஒபாமா சபதம் மேற்கொண்டுள்ளார்.

இதற்காக உலக நாடுகளின் ஆதரவை அவர் கோரியுள்ளார். இதுவரை 40-க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவின் தலைமையிலான அணியில் சேர்ந்துள்ளன.

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்க எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியாவின் ஆதரவை கோர ஒபாமா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு, வரும் 29-ம் திகதி வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா விருந்தளிக்கிறார்.

அடுத்த நாளே இருவரும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது தீவிரவாத இயக்கத்திற்கு எதிரான அணியில் சேருமாறு ஒபாமா இந்தியாவிற்கு அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: