இந்திய – சீன எல்லைப் பதற்றம் முடிவுக்கு வந்தது : சுஷ்மா சுவராஜ் தகவல்

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக, இந்திய – சீன எல்லைப் பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.

நியூயார்க்கில் சந்திப்புக்குப் பிறகு சுஷ்மா சுவராஜ் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று முதல் இந்தியா – சீனா எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் இரு நாட்டுப் படைகளும் படிப்படியாக வெளியேறி, 30ம் தேதிக்குள் இரு படைகளும் முழுமையாக எல்லையில் இருந்து வெளியேறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு பதில் அளித்த சுஷ்மா சுவராஜ், ஹூரியத் தலைவர்களுடன் பாகிஸ்தான் பேசியதால் தான் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

TAGS: