தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் கண்ணீர் மல்க ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுள்ளார்.
அ.தி.மு.க. பொருளாளராக இருந்து வரும் 63 வயதான ஓ.பன்னீர்செல்வம் நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய சட்டமன்ற கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இதையடுத்து தனது சகாக்களுடன் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
அதைத் தொடர்ந்து ஆட்சியமைக்க வருமாறு பன்னீர் செல்வத்திற்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிமையான பதவியேற்பு விழாவின்போது அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.
முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார்.
இரண்டாம் இணைப்பு:
ஆளுநர் மாளிகையில் பிற்பகல் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசையா, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர் செல்வத்துடன் மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இரண்டாவது முறையாக கண்ணீர் மல்க பதவியேற்றுக்கொண்டார்.
யார் இந்த பன்னீர் செல்வம்?
புதிய முதல்வராக பதவி ஏற்க உள்ள ஓ. பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1951ம் ஆண்டு ஜனவரி 14ம் திகதி பிறந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், மகன்கள் ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப், மகள் கவிதா ஆகியோர் உள்ளனர்.
கடந்த 1996–ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகர்மன்ற தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 2001–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.
அதன்பின்னர் மே 19ம் திகதி ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பதவி ஏற்றார்.
பின்னர் முதல்வராக இருந்த ஜெயலலிதா டான்சி நில வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்புபடி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து செப்டெம்பர் 21ம் திகதி முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார்.
அதனை தொடர்ந்து வழக்கில் வெற்றி பெற்றதையடுத்து மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார்.
அப்போது ஓ. பன்னீர்செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
2006–ம் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை இழந்தது. இந்த தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இருந்து மீண்டும் ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வாக தேர்வானார். தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராகவும் பதவி வகித்தார்.
2011–ம் சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தெரிவு செய்யப்பட்டு நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.
தற்போது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இவர் மீண்டும் இரண்டாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
ஜெயலலிதா சிறைகுள்ளே இருக்கிறார் என்று ஆனந்த கண்ணீரா ?
அல்லது இரண்டாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவி கிடைத்து விட்டதே என்று ஆனந்தத்தின் கண்ணீரா ?
ஆளும் கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டு , பொது சொத்துக்களை நாசம் செய்தது தெரிந்தும், அதிமுக-வை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளது, ஆளுநரே அராஜகத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது.
எதற்கும் பெங்களூரு சென்று அம்மாவின் காலில் விழுந்து அவரின் புனிதக் கரங்களால் ஆசிர்வாதம் வாங்கி விடுங்கள். அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தால் உங்களுக்குப் பயனாக இருக்கும்!
அம்மா மீது உள்ள பற்று ,அன்பும் பாசமும் ,அது மட்டுமா புரட்சி தலைவர் MG ராமசந்திரன் ,ஏழைகளின் இதய தெய்வம் ,,இவர்களின் வலையில் வந்தவர்கள்தானே ,கண்ணீர் விடல் பின்ன என்ன ? மூதேவி மாதிரி நையாண்டி தனமான கருத்துக்கள் எழுதுறாங்க பாருங்க ,,ச்சி
தமிழகத்திலும் கர்நாடகாவிலும் உள்ள தேவாலயங்களின் நன்மைக்காக தனது அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை சமீபத்தில் அந்தப் பாதிரியாரிடம் எடுத்துரைத்துள்ளார் ஜெயலலிதா.
மனம் மகிழ்ந்த பாதிரியாரும் ஞாயிறன்று பூசை முடிந்ததும் நீதிபதி டி குன்ஹாவை அழைத்து, ‘உங்களோடு சில நிமிடங்கள் தனியாக பிரார்த்தனை செய்ய விரும்புகிறேன்’ என்று கேட்டாராம்.
நீதிபதி டி குன்ஹா சம்மதித்திருக்கிறார்.
பிரார்த்தனை முடிந்ததும் பாதிரியார் விஷயத்துக்கு வந்தார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கொஞ்சம் கருணை காட்ட இயலுமா? என்று கேட்டிருக்கிறார்.
இதற்கு நீதிபதி குன்ஹா இப்படி பதில் சொன்னாராம்:
‘அன்பு தந்தை அவர்களே, உங்கள் போதனைகளை தேவாலயத்தின் நான்கு சுவர்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள். நீதித்துறை விஷயங்களில் தலையிடாதீர்கள். இது என் அறிவுரை மட்டுமல்ல. கடும் எச்சரிக்கையும் கூட. இதற்கு மேலும் இந்த வழக்கு விஷயத்தில் நீங்கள் தலையிட்டால், நான் அணிந்திருக்கும் இந்த புனித சிலுவை பொருத்திய செயினை அறுத்தெறியவும், இதோ கையில் வைத்திருக்கும் புனித பைபிளை வீசியெறியவும் தயங்க மாட்டேன்’.
ஆடிப்போனாராம் பாதிரியார்!
சமூக வலைத் தளங்களில் இந்தத் தகவல்தான் இப்போது பரபரப்பாக பரவிக் கொண்டிருக்கிறது.
அதிபர் ஆட்சி அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும். கையால் ஆகாத கபோதிகள். இதில் சினிமாவை சேர்ந்தவர்களும் உண்ணாவிரதம்? மட ஜென்மங்கள். இப்படி இருந்தால் என்றுமே ஊழல் இல்லாமல் எதுவுமே நடக்காது. பிலிப்பின்ஸ் இமெல்டா மார்கோஸ் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டாள்- நாட்டை விட்டும் துரத்தபட்டாள் ஊழலுக்காக.
கலை துறையை சேர்ந்தவர்கள் உண்ணாவிரதமா ?
எண்டா கூத்தாடிகளே ! உங்கள் நடிப்பை சினிமாவோடு நிறுத்தி கொள்ளுங்கள். அப்படி உண்ணாவிரதம் இருக்க விரும்பும் கூத்தாடிகள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கலாமே ?
ஏன், காலையில் இருந்து மாலை வரை மட்டும் உண்ணாவிரதம் ?
கலைத்துறையைச் சார்ந்தவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தால் அப்புறம் தமிழ் நாடே இருண்டு விடுமே. சினிமா, சின்னத் திரை இல்லாமல் தமிழக மக்கள் வாழ முடியுமா. அடுப்பில் சோறு வேகாது. செஞ்சோற்றுக் கடனுக்கு நன்றி கூறும் தமிழக கலைஞர்கள் நல்ல “திறமை” வாய்ந்த நடிகர்களே.
எத்தனை தடவை தற்காலிக முதவராக பதவி ஏற்பது ;எப்பொழுது நிரந்தர முதல்வராக ஆவது என்ற மனகலகத்தில் கண்ணீர் விட்டிருபாரோ பன்னீர் செல்வம் !
இறைவா , இவர்களை நம்பி வாக்களித்த மக்கள் கதி என்னவாகும்??!! அழுகை வருகிறதோ இல்லையோ, கண்களை துடைப்பதுபோலாவது நடித்தாகவேண்டும்..!!!!!!!!! …..இத்தனை காலம் குனிந்து நின்று அடிமையாக நடித்து கும்பிடு போட்டு இடுப்பொடிந்து போனதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை ….!!!
உண்ணாவிரதத்தில் மதுரை ஆதினமும் சேர்ந்துக்கொண்டார், பார்த்தீர்களா?? இவரெல்லாம் ‘சாமியார்’!!! ஒரு காலத்தில் ஏ.கே.-47 ஏந்துவேன் என்று சொல்லிக்கொண்டு, தி.மு.க.-வை தூக்கித் தாங்கி கொண்டிருந்தவர் அல்லவா இவர்!!! கேடுகெட்டவ…….!!!!
தற்சமய மதுரை ஆதீனகர்த்தர் அந்த ஆதீனத்திற்கு தலைமை தாங்க தகுதி அற்றவர். அவரை ஆதீனம் என்று அழைப்பதை நிறுத்துங்கள்.
தாயுமானவர் போன்ற தூய இறைத்தொண்டர்கள் வாழ்ந்த பூமியில் இப்படிப்பட்டவர்களும்…
முன்பு பதிவு செய்ததையே மீண்டும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் .
இவர்கள் யாரும் அனுதாபத்திற்காக கொடிபிடிக்கவில்லை !?
எங்கே இந்த பேய் மீண்டும் எழுந்துவந்து ஆட்சியில் உட்கார்ந்துவிடுமோ …,அப்படி உட்கார்ந்து கொண்டால் நம் அரசியல்
லாபம் எல்லாம் மண்ணாகி போகுமே …என்னும் கேவலமான வேசித்தனம் தான் !
கொள்ளையோ கொள்ளை அடித்து வீங்கிக்கிடக்கும் கைப்புண் கண்டும் ஈனத்தனமாக ஆர்ப்பாட்டம் பண்ணும் இந்த கேடுகெட்ட
மக்களா நாட்டை நலம் பெறச் செய்வார்கள் ???
நம் நாட்டில் 5 கில்லோ அரிசிக்கும் பருப்புக்கும் விலை போகும் பாமரர் போன்றோர் …எவ் உலகிற்கும் பயன் பெறார் !!!
ஒருவனின் பார்வையில் wrote on 29 September, 2014, 10:43
மகாபாரதம் சொல்வதுபோல இவ்வளவு பேர் மனுக்குல தர்மம் /அதர்மம் …, நீதி/ நியாயம் …அறியா ஈனப் பிறவிகளாக …மண்ணுக்கு பாரமாக …,
மனிதன் என்று வாழ்வதைவிட செத்து மடிந்து …இந்த மண்ணுக்கு உரமாகி புதியதோர் உலகம் /புதியதோர் மக்கள் கூட்டம் தோன்ற அந்த
கீதை சொன்ன கடவுள் …,கிருஷ்ண பரமாத்மா அருள் புரியட்டும் !
இந்தியா நலம் பெறும்/வளம் பெறும் .
செவ்வாய் கிரகத்துக்கு கோடிகோடியாக செலவழித்து வின் ஓடம்
அனுப்பும் அறிவாளிகள் …அங்கே வாழும் மக்களுக்கு நலமே /சுகமே
வாழ என்ன என்ன வசதிகள் செய்து கொடுத்திருக்கிறார்கள் ???
சாதாரண மனிதத் தேவைகள் …ஒன்றா இரண்டா இங்கே அடுக்க ???
மாட மாளிகைகள் பெருகினாலும் மனிதனுடைய சிறு தேவை …சிறுநீர் கழிக்கக் கூட வசதி செய்யத் தெரியாத அரசு …இவைதான்
இந்த இழி மக்கள் போற்றும் தலைவர்களா ???
கோடிகோடியாக கொள்ளை அடித்து அவர்கள் …சொகுசாக வாழ
இந்த மூட மக்களை கற்கால வாசிகள் போன்று நடத்தும் நிலை உணரா அறிவிலிகளா இந்த கூப்பாடு போடும் கூட்டம்?
ஒருப்பிரலயமே வந்து இந்தப் பாவிகளை அழிக்கட்டும்…,
இந்தியா நலம் பெறும் !!!
ஓ…கிருஷ்ணா …,பகவானே நீ இருக்கிறாயா ?
பாரதப் போரில் கோடிக்கணக்கான அதர்ம வாதிகளை நீ தான்
அழித்தாய் என்பது உண்மையானால் …மீண்டும் எடு ……………,
இன்னொரு அவதாரம் !!!
இந்தியாவை சுத்தப் படுத்து !!!
இன்றைய சாமியார்கள் எல்லாம் கோடீஸ்வரகள் ,1970இல் ஒரு நவராத்திரி விழாவில் சுவாமி பிரணவானந்த சரஸ்வதி அவர்களை
சமய சொற்பொழி வுக்காக அழைத்த சமயம் ;அவர் சொன்னார், ,இந்தியாவில் உள்ள அவர்களின் தலைமை நிலையம் அவரை மலேசிய பத்துமலை ஆசிரமத்தை பொறுபேற்க கேட்டுக்கொண்டும் …தான் இன்னும் அரசு சேவையில் இருப்பதாலும் …,ஓ ய்வ்வூதியம்
பெறும் காலம் பூர்த்தியானால் மட்டுமே இந்த பொறுப்பை ஏற்க
முன்வருவேன் என்றாராம் .
காரணம் தன் தேவைகளுக்காக ஆசிரம நிதியில் கைவைப்பது
நல்ல சமயத் தொண்டனுக்கு அழகல்ல என்றார் .
இப்படிப்பட்ட நல்ல மனிதர்களும் நம் காலத்தில் கண்டது பெறும்
பேரு .
ஆனால் இந்த மதுரைக்காரர் அரசியல் நாடகம் நடத்துகிறார் ,
சமயத்தின் பெயரால் !
அரசியலில் அறம்பிழைத்தார்க்கு அதுவே கூற்றாகும் என்பது
இன்றும் மெய்ப்படுமா ???
பணநாயகம் …..??????????????????
தி மு க வின் வழக்கு வேறு ,இன்றைய வழக்கு வேறு !
இது 18 ஆண்டுகளாக தள்ளிப் போடப்பட்டது ;
மகா பாரதம் …அதன் போர் 18 நாட்கள் !
இந்த அம்மையாரின் இழுத்தடிப்பு சாதனை 18 ஆண்டுகள் !
நீதிபதி தீர விசாரித்தே நீதி வழங்கி இருக்க ;இந்த அரசியல்
ஆதாயம் தேடிகள் நடத்தும் நாடகம் மிகவும் கேவலமாக
இருக்கிறது !
முந்தய வழக்குகளில் விடுவிக்கப் பட்டாராம் ,எத்தனைக்
கோடிகள் கைமாரியதோ …???ஆண்டவனுக்கே வெளிச்சம் !
இன்னும் எத்தனைக் கோடிகளுக்கு கனவு கண்டுக் கொண்டு
எங்கெல்லாம் வீசினால் வலை பிரியும் என்னும் நப்பாசையில்
புறப்பட்டுள்ளது வியூகப் படை ……,ஜெயிக்குமா ?
தர்மம் சாகுமா ???
கீதை சொன்ன கண்ணா …,நீ அன்று சொன்னது பொய் அல்லவே !!!
இந்து சமயமும் …அதன் நீதிகளும் செத்து சாம்பலாகிப் போனதுவா ???
தி மு க வின் வழக்கு …அதன் தீர்ப்பு …குற்றம் என்று நீதிமன்றம்
முடித்தால் …அதுவும் குற்றமே !
மாற்றுக்கருத்து பேசுவது மடமை !!!
அப்போது தான் அரசியல் களம் மாறும் …மாற்றம் மக்களுக்கு நலன்
தரவேண்டும் !!!
இந்தியாவை சுத்தப்படுத்த முடியாது.எவனுக்கும் அக்கறை இல்லை.
அவள் மீண்டும் முதல் அமைச்சர் ஆகலாம். ஊழல் மலிந்த நாடு இந்தியா.
ஐந்து வருடங்களில் அறுபது ரூபாய் ( மாதம் ஒரு ரூபாய் ) வாங்கிய அம்மா, எப்படி அறுபது கோடிக்குமேல் சொத்து சேர்த்தார். வளர்ப்பு மகனுக்கு ஒன்றேகால் கோடியில் திருமண உடைகள் வாங்கி நூறுகோடியில் திருமணம் செய்து வைத்தார். அவரும் உபிச வும் (உடன் பிறவா சகோதரி) அணிந்திருந்த தங்க வைர நகைகள் மற்றும் உடைகளும் கோடிகள் பெறும் கண்கொள்ளா காட்சி. இவ்வளவும் தங்களிடம் இருந்துதான் சுரண்டப்பட்டது என்பதை அறியா பாமர மக்களை மன்னிக்கலாம்.இது ஒரு சாதாரண மனக்கணக்கு. ஆனால் வக்கீல்களும் அமைச்சர்களும் படித்தவர்களும்கூட சூழ்ச்சி என்று போட்டிபோட்டுக்கொண்டு ஒப்பாரி வைகிறார்கள், மறக்காமல் கண்ணீரோடு போஸ் கொடுக்கிறார்கள். அம்மா வீடியோவை பார்ப்பார் என்பதனால். சினிமாகாரர்களை கண்டுகொள்ள தேவையில்லை. அவர்களுக்கு எங்கு எப்படி நடிக்கவேண்டும் என்று தெரியும். சூழ்ச்சி என்று ஊளையிடுகிறவர்கள் ஏன் 18 ஆண்டுகள் இழுத்தடிக்கவேண்டும். ஆரம்பத்திலேயே வழக்கை சந்தித்து புடம்போட்ட தங்கமாய் ஜோலிதிருக்கலாமே. அறிவிலிகள். சினிமாமோகம்தான் தமிழ்நாட்டின் சாபக்கேடு.