பிரதமர் மோடி, ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும்: ராம் ஜெத்மலானி

jeya_modiஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனு மீது நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. வழக்கின் மறு விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு நீதிபதி ரத்னகலா ஒத்திவைத்தார்.

இதையடுத்து ஜெயலலிதாவின் சார்பில், நாளையே ( இன்று)  விசாரணை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா உட்பட 4 பேரின் மனுக்களுக்கும் இதே நிலைதான் இருந்தது.

இன்று காலை 10.30 மணிக்கு இந்த மனு விசாரணை வந்தது. ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உட்பட இரு தரப்பு வழக்கறிஞர்களும் விசாரணைக்கு தயாராக இருந்தனர். ஆனால், இந்த மனுவை நீதிபதி விசாரணை செய்ய மறுத்தார்.

இது குறித்து ராம் ஜெத்மலானி, வழக்கை விசாரிக்காமலேயே நீதிபதி ஒத்திவைத்துவிட்டார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

அவர் மேலும், பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என்று கூறினார்.

TAGS: