காந்தி ஜெயந்தி அன்று அக்டோபர் 3ம் திகதி அமைச்சர்களும், அதிகாரிகளும் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, காந்திஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் திகதியன்று சுத்தமான இந்தியா என்ற திட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி, சுத்தமான இந்தியா என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கும் வகையில் அனைத்து துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் அன்றைய தினம் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் பெருகி வரும் மக்கள் நெருக்கம் காரணமாக கட்டுக்கடங்காத வகையில் குப்பைகள் பெருகி வருகின்றன.
மேலும், இந்தியாவில் போதிய சுகாதார வசதியில்லாத காரணத்தால் ஏற்படும் நோய்கள் காரணமாக ஏராளமானோர் உயிரிழப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே, இந்த புதிய விழிப்புணர்வு பிரசார திட்டத்தை மத்திய அரசு தொடக்கியுள்ளது.
இதுகுறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், துடைப்பம் உள்ளிட்ட கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. அன்றைய தினம், நாங்கள் குளியலறை, கழிவறைகளை சுத்தம் செய்ய உள்ளோம் என்று கூறியுள்ளார்.
மிகவும் நல்ல செயல். சில திருட்டு அமைச்சர்களும் அதிகாரிகளும் கழுவுவதுபோல் அங்கிருந்து நழுவல் வேலையும் செய்வார்கள். கங்காணி வேலை கண்டிப்புடன் இருக்க வேண்டும். நாடு சுத்தமாக இருந்தால் அதிக வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் வருவார்கள். மக்களுக்கு வேலை வாய்ப்பு கூடும் இன்னும் 1000 நன்மைகள். வருடம் 1 முறை என்று இல்லாமல் மாதம் 2 முறை செய்தால் கூட இந்திய அழுக்கை சுலபத்தில் அகற்ற முடியாது. முயற்சி செய்யுங்கள்.
ஷபாஸ் மோடி, காந்திவிட்டு சென்ற பணியை தொடர்ந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள். சமதர்ம சமுதாயம் மலர, இத்திட்டம் திண்ணமாக வழி வகுக்கும். காந்தியின் ஜனனம் மரணம் என்று ஆண்டுக்கு இரண்டு தினங்களில் இது மேற்கொள்ள வேண்டும்.
சமுதாயத்தை சீரழிக்கும் சாதியை ஒழிக்க இதுவே சிறந்த வழி.
மோடியின் திட்டம் வெற்றி பெற வாழத்துகள்.
அதை மகாத்மா காந்தி செய்தாரே, இவர்களும் செய்தால் என்ன?? ஏன் மறுப்பு, ஏன் தயக்கம்??? நல்ல திட்டம். சாதி பேதமின்றி இந்திய மக்கள் சமத்துவமாக வாழ இது ஒரு நல்ல திட்டமே!!. மோடிக்கு பாராட்டுகள்..
இனவாத கொள்கையை தமிழனுக்கு எதிராக கடைப்பிடிக்கும் நீர் முதலில் உன் வீட்டு கழிவறையை சுத்தம் செய்!
நல்ல முயற்ச்சி , அரசியல் முதலைகள்,ரவுடிகள்,அரசாங்க உழல் அதிகாரிகள்,அரசியல் தலைவர்கள் என்ற போர்வையில் கொள்ளையடிக்கும் நாதாரிகளையும் சேர்த்து கழுவுங்கள் முடிந்தால் ஒழித்துவிடுங்கள். வாழ்க வளமுடன்
வரவேற்கிறேன் தலைவா! துடைப்பமாறு வாங்க எத்தனை கோடி கொள்ளையடிப்பார்களோ! அரசியல்வாதிகள் எல்லாவற்றிலும் பணம் பார்ப்பவர்கள் ஆயிற்றே! ஆனாலும் இவர்களை அருந்ததிகள் செய்கின்ற வேலைகளைச் செய்யச் சொல்லியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்!
இதுவெல்லாம் நாடகம் …..தமிழர்களுக்கு இதுவும் ஒரு வெட்டு வைக்கும் ஓநாய்தான்