பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்ற அதிமுக வழக்கறிஞர்கள் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெயலலிதா சரி என்று கூறி விட்டால் அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவுள்ளனர்.
கைதியின் உடல் நலம், பாதுகாப்பு, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி சம்பந்தப்பட்ட சிறை அதிகாரியிடம் இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கலாம். அவர் பரிசீலித்து கைதி விரும்பும் சிறைக்கு மாற்ற முடியும்.
எனவே அந்த அடிப்படையில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து புழல் சிறைக்கு ஜெயலலிதாவை மாற்றுவது தொடர்பான சட்ட ஆலோசனைகள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு விட்டனவாம். ஜெயலலிதாவின் சம்மதத்திற்காக தற்போது அதிமுக தரப்பு காத்துக் கொண்டுள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா இசட் பிரிவு பாதுகாப்பின் கீ்ழ் உள்ளவர்.
மூட்டு வலி, முதுகுவலி, சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றால் அவர் தொடர் சிகிச்சை பெறும் நிலையில் உள்ளவர். எனவே இதைக் காரணம் காட்டி சிறை மாற்றத்திற்கு அதிமுக தரப்பு திட்டமிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கட்டிய புழல் சிறைக்கு அவரே…வா? ஊகும்..! அதற்கு அவர் தன்மானம் இடம் கொடுக்காது! அதுவும் தமிழ் நாட்டில் இருந்தால் தினம் தினம் துக்கம் விசாரித்துக் கொண்டிருப்பார்கள்! அதற்கு இப்போது இருப்பதே மேல்!
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து விட்டார்களோ அதிமுக வழக்கறிஞர்கள்.
பரப்பன அக்ரஹாரா சிறையா இருந்தால் என்ன !!!
புழல் சிறையா இருந்தால் என்ன !!! (ஒரு சினிமா வசனத்தைபோல்)
” ஜாமின் கிடைக்காதலால் சிறைக்கு போகிறோம் ”
ROME !!! ROME !!! ROME !!!
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நியதி என்னவாயிற்று? பெரும் அதிகாரத்தில் உள்ளவர்கள் பெரும் மக்கள்-நலன் பாதிப்பு தவறுகள் செய்யும் போது அதற்கான தண்டனையும் மிக4 கடுமையானதாக இருக்க வேண்டும். NGOகள், மாணவர் அமைப்புகள் இதுபோன்ற சட்ட வரைவுகளை புகுத்த கடும் முயற்சி எடுக்க வேண்டும். பெரும்பாலும் திருட்டுப்பயல் கூட்டமே
MPs ஆக இருப்பதால் சுலபத்தில் அவர்கள் இது போன்ற மாற்றங்கள ஏற்பட உடன்பட மாட்டார்கள். அப்படி செய்தால் தாங்கள் மாட்டிக்கொள்ளும்போது இந்த சிறப்பு சலுகை இல்லாமல் போய்விடுமே..!! ஜெயா செய்தது திருட்டு வேலை. ஜெயுலுக்குப் போன பின் என்ன சிறப்பு சலுகை..?! எல்லா கைதிகளையும் போலவே இவரை நடத்த வேண்டும். உடம்பு சரியில்லாதபோது ஏன் இந்த களவாணி குள்ளமாரி வேலை..?! பெரும் அரசியல் வாதிகளுக்கு சிறையில் சிறப்பு சலுகை என்றால் இந்தியாவில் ஊழலை ஒழிக்கவே முடியாது. மாறாக இப்படி தண்டிக்கப் பாடுபவரின் ஒரு கையையோ காலையோ (அவர் விருப்பப்படி) எடுக்க வேண்டும் என்ற சட்டம் வேண்டும். ஊழல் ஒழிந்தால்தான் சாமானியர் நாளைக்கு 3 வேலை ஒழுங்கா உண்ண முடியும். பாமர மக்களுக்கு இது புரியவே மாட்டேனுதே…!!! மக்களை ஏய்க்கும் ஊழல்வாத்திக்காக தற்கொலை..!!!!!!!!!!!!!!!!!! கசமாலக்கூட்டம்.