சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதால் தமிழகத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த வாரம் சனிக்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவிற்கு எதிரான இத்தீர்ப்பை எதிர்த்து கடந்த ஒரு வாரமாக அதிமுகவினர் போராட்டாங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுகவினருடன் இணைந்து மற்ற துறையினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா கைதால் அதிர்ச்சியடைந்த அதிமுக தொண்டர்கள் சிலர் மாரடைப்பால் உயிரிழந்தார்கள்.
மேலும், சிலர் ஜெயலலிதாவை உடனடியாக விடுதலை செய்யக் கோரி தற்கொலை செய்து கொண்டனர்.
இதில் பள்ளி மாணவிகளும் அடக்கம், இந்நிலையில், இவ்வாறு தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளதாக அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோ far 62 முட்டாள் இருகிறார்கள் இன்னும் எதனை முட்டாள்கள் தமிழகத்தில் இருகிறார்கள் என்று பார்போம்………….
எண்ணில் அடங்கா முட்டாள்கள் இருக்கின்றனர். அவங்கள் எல்லாம் காரண முட்டாள்கள். காற்று எந்த திசையில் வீசுகிறது என்பதே முக்கியம்– லாலாங் போல் சாய.
“பலியானார்கள்” என்று கூறி அனுதாபம் தேட முயலாதீர்கள்.
ஜெயலலிதா தண்டனை பெற்றதால் உயிரிழந்தார்கள்.என்றால் அது அவர்களது மடமை தனம்.
விசாரித்ததில் 62 பேர்களில் ஒருவர்கூட அதிமுக MLA அல்லது அதிமுக MP-யோ இல்லையாம். இறந்தவர்கள் அனைவரும் அதிமுக-வின் தொண்டர்கள்தானாம்.
அதிமுக-வின் தொண்டர்கள் ஜெயலலிதாமேல் வைத்திருக்கும் மரியாதை மற்றும் பாசத்தில், ஒரு துளி கூட அதிமுக MLA / MP-க்களுக்கு இல்லாமல் போய் விட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.
ஆகவே, இப்படியொரு களங்கத்தை துடைக்க, யாரவது ஒரு அதிமுக MLA அல்லது MP உடனே உயிரை மாய்த்து கொண்டு, நாங்களும் தொண்டர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும்.
அவர்கள் நம்மைத்தான் முட்டாள்கள் ஆக்குகின்றனர். இந்திய அரசியலில் ஒரு கணக்கு உண்டு. இதையெல்லாம் அரசியல் தலைவர்கள் மிகவும் கெட்டிக்காரத்தனமாக செய்கிறார்கள். ஒருவன் செத்தால் அந்தக் குடுமபத்துக்கு எவ்வளவு பணம் கிடைக்கும், உண்ணாவிரதம் இருந்தால் எவ்வளவு பணம் கிடைக்கும், மனிதச்சங்கிலி என்றால் எவ்வளவு பணம் கிடைக்கும், ஆர்ப்பாட்டத்திற்கு எவ்வளவு பணம், பஸ், லாரிகளை எரித்தால் எவ்வளவு பணம், கோவில்களில் வேண்டுதல்கள் செய்ய எவ்வளவு பணம் என்றெல்லாம் கணக்கு வைத்திருக்கிறார்கள். நாளை தி.மு.க. வில் இதே போன்ற அசம்பாவிதங்கள் நடந்தால் இப்போது யார் யார் போராட்டம் செய்கிறார்களோ அவர்கள் தான் அங்கேயும் செய்வார்கள்! பொது மக்கள் அன்றன்று உழைத்தால் தான் அன்றைய சாப்பாடு. இங்கே எளிதாகப் பணம் கிடைக்கும் போது ஏன் கஷ்டப்பட வேண்டும்?
கவலை வேண்டாம். அம்மா வெளியே வந்தால் அவர்களுக்கு உயிர் பிச்சை கொடுத்து மீண்டும் சிலை எழுப்பி விடுவார்.
மேல் வகுப்பு, நடுத்தர வகுப்பு இவை இரண்டிலுமிருந்து எந்த ஆண்களும் பெண்களும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை!! ஆகக் கீழ் வகுப்பில் (தமிழ் நாட்டின் மக்கள் பிரிவினைக் குறிப்புப்படி) உள்ள அன்றாட பிழைப்பிற்காக கைகளை ஏந்தி நிற்கும் மதி கெட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் கைச் செலவிற்கு பணம் கொடுத்து அ.தி.மு.க.-பெரிய புள்ளிகள் கூலிக்கு ‘மாரடிக்க’ வைக்கிறார்கள், வன்முறையில் ஈடுபட வைக்கிறார்கள். ‘கண்ணகி சிலையை அகற்றி கழிசடைகள் ஆளும் நாடு தமிழ் நாடா??’ என்று கவிஞர் பொன்முகம் முன்பு எழுதியது இன்று நினைவுக்கு வந்தது!!
தினகரன் படிக்க இயலாதவர்கள் பின் வரும் செய்தியையும் பார்க்க :
சுதாகரனுக்கும் நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தி சத்தியலட்சுமிக்கும் நடந்த திருமணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார்தான் செய்தார் என்று ஜெயலலிதா தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. அதேபோல், அந்த திருமணத்துக்கான அனைத்து செலவுகளையும் மணமகளின் வீட்டார்தான் செய்தனர் என்று ஜெயலலிதா தரப்பில் செலவுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.
மேலும், திருமண மண்டபத்துக்கான பந்தல், திருமண வரவேற்பு பத்திரிகை, ஜவுளிகள் மற்றும் திருமணத்துக்கு வருபவர்கள் தங்க ஏற்பாடு ஆகியவை தொடர்பான அனைத்து ஒரிஜினல் ரசீதுகள் அனைத்தும் ஜெயலலிதாவின் ஆடிட்டர் ராஜேசேகர் வீட்டில் கைப்பற்றப்பட்டுள்ளது. அதிமுக மாவட்டச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் மற்றும் கட்சி அபிமானிகள், எம்எல்ஏக்கள்தான் சுதாகரன் திருமணச் செலவை செய்தனர். பந்தல், அலங்கார வளைவுகள், சமையல்காரர்கள் ஏற்பாடு மற்றும் 30 ஆயிரம் பேருக்கு சாப்பாடு ஆகியவற்றை கட்சிக்காரர்கள்தான் செய்தார்கள் என்று ஒரு பெரிய கதையை ஜெயலலிதா கூறியுள்ளார். அதே நேரத்தில் 1996-1997ம் ஆண்டு ஜெயலலிதா தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் சுதாகரன் திருமணச் செலவுக்காக ஸீ29.92 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை அரசுத் தரப்பு தெளிவாக நிரூபித்துள்ளது.
திருமணத்துக்காக ஒரு தனி வங்கிக் கணக்கை ராம்குமார் தொடங்கியது ஆச்சரியப்படவைக்கிறது. பொதுவாக தனது மகள் அல்லது மகன் திருமணத்துக்காக பெற்றோர்கள் சேமிப்பு அல்லது கடன் பெறுவதற்காக வங்கிகளில் கணக்கு தொடங்குவார்கள். ஆனால் இந்த வழக்கில், திருமணத்துக்காக ஒரு தனி கணக்கு தொடங்கப்பட்டு அந்த கணக்கிற்கு ஜெயலலிதா தரப்பிலிருந்தும் அவரது கம்பெனிகளின் தரப்பிலிருந்தும் பணம் அனுப்பப்பட்டுள்ளது. மணப்பெண்ணின் தந்தையான நாராயணசாமி அப்போதிருந்து பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கு திருமணச் செலவுக்காக ஸீ4 லட்சம் கொடுத்துள்ளது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ராம்குமாருக்கும், ஜெயலலிதாவுக்கும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் யார் பணம் டெபாசிட் செய்தார்கள் என்பது குறித்து தெளிவான விளக்கமோ ஆவணங்களோ தாக்கல் செய்யப்படவில்லை. நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பில் தாக்கல் செய்த வங்கிக் கணக்கு நகல்களில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதன் உண்மைத் தன்மையிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ராம்குமார் அளித்த ஒட்டுமொத்த சாட்சியத்திலும் பணம் எந்த கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது என்று கூறவில்லை. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சுதாகரனின் திருமணச் செலவுக்கான பணம் அனைத்தும் ஜெயலலிதாவிடமிருந்துதான் பெறப்பட்டுள்ளது. மணமகளின் குடும்பத்திலிருந்து திருமணச் செலவு செய்யப்படவில்லை. மொத்த செலவுகள் ஸீ3 கோடிக்கும் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சுதாகரன் திருமண செலவுகளை பெண்ணின் வீட்டார்தான் செய்தனர் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால், பின்னர் செலவுகளை கட்சிக்காரர்கள் செய்தார்கள் என்றும் கூறினார். ஆனால் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்து செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாறி, மாறி கூறி தவறுகளை மறைக்க முயன்றதை நீதிபதி தனது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பில் கூறப்பட்டுள்ள திருமணசெலவு விவரம்
திருமணப் பந்தல் செலவு ஸீ5.21 கோடி, உணவு, மினரல் வாட்டர் மற்றும் தாம்பூலம் ஆகியவற்றுக்கான செலவு ஸீ1.14 கோடி, 34 டைட்டன் வாட்ச் ஸீ1.34 லட்சம், 100 வெள்ளி தட்டுகள் ஸீ4 லட்சம், திருமண உடைகளுக்கான தையல் கூலி ஸீ1.26 லட்சம், 56 ஆயிரம் திருமண பத்திரிகைகளை அனுப்புவதற்கான தபால் கட்டணம் ஸீ2.24 லட்சம் ஆகியவை செலவிடப்பட்டுள்ளன. இவையெல்லாம் சாதாரண கணக்கீடுதான் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுவும் செய்தி தான் :
நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் கை கட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் ஊர்வலம், பொதுக்கூட்டங்களுக்கு மக்களை பணம் கொடுத்து கூட்டிச் செல்வதைப் போல தற்போது நடைபெறும் போராட்டத்துக்கும் பணம் கொடுத்து அழைத்துச் செல்வதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர். ஒவ்வொரு உண்ணாவிரதப் போராட்டத்திலும் சுமார் ஆயிரம் பேர் முதல் 2 ஆயிரம் பேர் வரை பங்கேற்கின்றனர்.
ஒரு ஆணுக்கு ரூ.2 ஆயிரம், குவாட்டர் மற்றும் பிரியாணி ஆகியவை வழங்கப்படுகிறது. பெண்ணுக்கு தலா ஆயிரம் ரூபாய், பிரியாணி வழங்கப்படுகிறது. இதனால், கூலி வேலை செய்பவர்களை தினமும் அழைத்துச் சென்று போராட்டத்தில் கலந்து கொள்ள வைக்கின்றனர். தேர்தலைப் போல இப்போதும் பணம் தண்ணீராக வாரி இறைக்கப்படுகிறது. தினமும் போராட்டம் நடத்த வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கூறுவதால்தான் இவ்வாறு செலவு செய்து போராட்டம் நடத்துகிறோம் என்று அதிமுக பிரமுகர்களே புலம்புகின்றனர். இந்நிலையில் பல்வேறு அரசியல்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூறியதாவது: ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என்று நடக்கும் போராட்டத்தில் வியாபாரிகள் கடையை அடைப்பதோடு, வருமானத்தையும் இழக்கின்றனர். அவர்கள் கடைகளை அடைக்கச் சொல்லி நிர்பந்தமும் செய்வதோடு அவர்களிடம் குறிப்பிட்ட அளவு பணம் மிரட்டி வசூலிப்பதாக வியாபாரிகள் சங்கம் எங்களிடம் கூறியுள்ளனர்.
இறந்தவர்களில் எதனை பேர் பிராமணர்கள் …..அனைவரும்
…………………………………
இன்னும் நிறைய பேர் சகவேண்டியுள்ளது அவர்களும் சாகட்டும்..?
உண்மையில் ஜெயலலிதாவிற்காக இறந்தார்களா என்று தெரியவில்லை. வேறு காரணங்களுக்கவும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம், மற்றும் இயற்கையாகவும் இறந்திருக்கக்கூடும். பிணவறையில் இருந்து பிணங்களை விலைக்கு வாங்கி எரித்து தீக்குளித்ததாகவும் பிரச்சாரம் செய்வதில் வல்லவர்கள். எதோ தமிழ்நாட்டில் கடந்த வாரம் இறந்த அனைவரும் ஜெயலலிதாவிற்காக இறந்தது போல் ஜெயா டிவி பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.
தம்பி… இதுதான் வீரப் பெண்மணியின் அரசியல். கடைகளை மூடச் சொல்லி ஒரு பக்கம் அடிச்சு உடைப்பான். மறு பக்கம் கடைகார முதலாளிகள் மனமுவந்து தானாகவே வந்து கடைகளை அடைத்து வீரப் பெண்மணிக்காக ( கொள்ளைக்காரிக்காக) ஆதரவு தெரிவிப்பதாக சொந்த மீடியாவில் படம்போட்டுக் காட்டுவான். நேற்றையச் செய்தி கொயிலையே நெருப்புவைத்து எரிச்சுட்டானுங்க. வாகன கண்ணாடிய உடைச்சிட்டானுங்க. பிள்ளைகள் பள்ளிக்குப் போக விடாமல் தடுக்குறானுங்க. ஆனால் அவள் வீரப் பெண்மணி என்று பீத்துவானுங்க காயீ போன்ற கருங்காலிகள்!