தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டிருக்கும் பதட்டத்தை பயன்படுத்தி ரஜினி துணையுடன் ஆட்சியைப் பிடிக்க அவசரம் காட்டுகிறது பாஜக. ரஜினியை கட்சிக்குள் இழுக்கும் அனைத்து முயற்சிகளையும் அக்கட்சி தலைவர்கள் முடுக்கிவிட்டுள்ள நிலையில், கூடங்குள அணுஉலை எதிர்ப்புப் பேராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் ரஜினிக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தின் விவரம் வருமாறு.
“வணக்கம். எனது பெயர் சுப. உதயகுமாரன்; நான் ஒரு சமூகப் போராளி. தாங்கள் நடித்த பதினாறு வயதினிலே முள்ளும் மலரும் போன்ற திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். தாங்கள் ஒரு நல்ல மனிதர், ஆன்மீக ஈடுபாடு கொண்டவர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.
தாங்கள் நேரடி அரசியலில் ஈடுபடவிருப்பதாகவும், அது குறித்து தங்கள் ரசிகர் மன்றத் தோழர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. ஓர் இந்தியக் குடிமகன் என்ற முறையில் தேர்தல் அரசியலில் ஈடுபடவும், அதற்கான ஆயத்தங்கள் செய்துகொள்ளவும் தங்களுக்கு முழு உரிமை இருக்கிறது.
ஆனாலும் தமிழகத்தின் வாக்காளர் என்ற முறையில் எனது சொந்தக் கருத்துக்கள் சிலவற்றை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
தங்கள் சொந்த மாநிலமான கர்நாடகத்திலிருந்து வேலை நிமித்தம் இங்கே தமிழகத்துக்கு வந்தீர்கள். கடினமாக உழைத்து ஓர் உயர்ந்த நிலையையும் அடைந்தீர்கள். தங்கள் நடிப்பை தமிழக இளைஞர்கள் விரும்பி, தங்களை ஆதரித்து மாபெரும் வெற்றிபெறச் செய்தனர். கேளிக்கையும், வேடிக்கையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இந்த உறவை மாற்றியமைத்து தமிழ் மக்களை வழிநடத்துவதற்கும், வருங்காலத்தை அமைத்துக் கொடுப்பதற்குமான அனுமதியாக தாங்கள் பார்க்கக்கூடாது.
திரைப்படத் துறையினர் தமிழக அரசியலில் புகுந்து, அசிங்கத்தையும், அவலத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். தமிழக அரசியல் அறிந்த அனைவரும் இதனை ஆமோதிப்பார்கள். நடிகர் அரசியல்வாதிகளையும், அரசியல் நடிகர்களையும் ஒட்டுமொத்தமாக விரட்டினாலொழிய தமிழினத்துக்கு விடிவு கிடையாது எனக்கொண்டு, கோடம்பாக்கத்துக்கும் கோட்டைக்குமான தொடர்பை அறுத்தெறிய என் போன்ற பலர் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும்போது, தாங்கள் பொதுவாழ்வுக்கு வருவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகிறது.
தமிழ் மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து கொழுத்துவிட்டு, மாநிலத்தின் பிரச்சினைகள் எதையும் கண்டுகொள்ளாது, எந்தப் பிரச்சினையிலும் ஒரு நிலைப்பாடு எடுக்காது, தங்கள் சுயநலன்களை மட்டுமே பேணிக்கொண்டு, தமிழ் மக்களின் முதுகுகளில் ஏறி அரசியல் அதிகாரமும் பெற்று மக்களைத் தொடர்ந்து ஏய்த்துக் கொண்டிருக்கும் சினிமாத் துறையே தமிழினத்தின் முதல் எதிரி என்று நான் உறுதியாக நினைக்கிறேன். தங்கள் விடயத்திலும் இது உண்மை என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
தமிழகப் பொது வாழ்வில் இந்தத் துறையினரின் ஆதிக்கம் முடிவுக்கு வராதா என்று நாங்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தங்களின் அரசியல் வருகை தமிழ் மக்களை பெரும் புயலாகத் தூக்கிச் செல்லாது என்றாலும், ஒரு பின்னடைவை ஏற்படுத்தலாம்.
பாரதிய ஜனசங்க காலத்திலிருந்தே முயன்றும், தமிழகத்தில் ஒரு கல்லைக்கூட அசைக்கமுடியாத ஒரு மதவாதக் கட்சி தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் சில அரசியல் மாற்றங்களை பயன்படுத்தி தங்கள் தோளில் ஏறி கரைசேர விரும்புகிறது.
அதேபோல வாழ்நாள் முழுவதும் தாங்களுக்காக உழைத்து தங்கள் வாழ்க்கையை இழந்துநிற்கும் ரசிகர்கள், தங்களால் ஓர் அரசியல் முக்கியத்துவம் வராதா, அதிகாரம் கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கின்றனர். இவர்கள் எல்லோருமே தமக்கு ஓர் அரசியல் வாழ்வை ஏற்படுத்திக்கொள்ள தங்களை பயன்படுத்தப் பார்க்கின்றனர். இதனால் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை தாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கர்நாடகத்தில் காலூன்றியிருக்கும் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் எத்தனை தலைமுறையானாலும் தலை தூக்காது. செல்லாக்காசான இந்தக் கட்சியில் சேர்ந்து தாங்கள் எங்கேயும் போய்ச்சேர முடியாது. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரையும்இ அதன் காரணமாக இந்தியா முழுவதும் பெற்றிருக்கும் சூப்பர் ஸ்டார் எனும் புகழையும் இழந்து விடுவீர்கள்.
தங்களின் இனப் பின்புலம் கேள்விக்குள்ளாக்கப்படும். இந்தியர் ஒருவரை மணந்து, இந்தியாவை தாயகமாக ஏற்று, இந்தி மொழியினை சரளமாகப் பேசி, இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்ட பிறகும்இ திருமதி சோனியா காந்தி இந்திய தலைமைப் பொறுப்பை ஏற்பதை பெரும்பாலான இந்தியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதே போல, கன்னடத்துக்காரரான தாங்கள், தமிழகத்துக்கு தலைவராவதை தமிழர்கள் பலர் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
இதனை இனவெறி என்று தாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. நடிகர் ராஜ்குமார் விவகாரம் முதல் எத்தனையோ பிரச்சினைகளில் தாங்கள் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகள், நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய தாங்கள் தமிழ் மக்கள் இன்னல் களைய எதுவும் செய்யாத நிலை என பல விடயங்கள் மக்களால் பேசப்படும், அலசப்படும். இம்மாதிரியான பல கேள்விகளுக்கு தாங்கள் பதில் சொல்ல வேண்டிவரும்.
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, மலேசியாவில் தமிழர்கள் மத்தியில் பேசிய நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் தமிழர்களுக்கு இப்படி அறிவுரைத்தார். “நீங்கப் பாக்குறீங்க. அக்ட் நல்லா செய்றோம். சந்தோசப்பட்டுக்கிட்டுப் போங்கோ. கோவிலுக்குள் போறீங்கோ, சாமியைக் கும்பிடுங்கோ, மரியாதையா வெளியே வாங்கோ. சாமிகிட்டேயே உக்காந்துக்கிட்டு குடும்பம் நடத்தாதீங்க. நல்லாருக்காது.
அதேமாதிரி எங்களப் பார்த்தா அபிப்பிராயம், நல்லாருக்குன்னு சொல்லிட்டுப் போயிடணும். அதனால நாங்கதான் பெரிசுண்ணும், காலம்பூரா எங்களையேவா நெனச்சுக்கிட்டு இருக்கிறது?” இந்த அறிவுரை தங்கள் ரசிகர்களுக்கும், பெரும்பான்மையான தமிழகத் தமிழர்களுக்கும் பொருந்தும்.
சினிமாக்காரர்கள் தலைவராவது பற்றி, எம். ஆர். ராதா அவர்கள் இப்படிச் சொன்னார். “உங்களுடைய பணத்தாலே முன்னேறியக் கூட்டம் சினிமாக்காரர்கள். நீங்கள்தான் எங்களுக்குத் தலைவர்கள். அதை விட்டுட்டு எங்களை தலைவராக்கிட்டு ரொம்பப் பேரு இருக்காங்க. அந்த நிலைமை மக்களுக்கு வரக்கூடாது.” இதையும் மீறி ஒரு நடிகர் தலைவராக விரும்பினால், ராதா அவர்கள் அறிவுரைத்தார்.
“ஜெயிலுக்குப் போய்ட்டு அப்புறம் அரசியலுக்கு வரணும். அரசியல் நடத்துறதா இருந்தா மொதல்ல ஜெயிலுங்கிற காலேஜில போய் படிக்கணும்.”
தங்கள் வாழ்வாதாரங்களைக் காக்கவும், வாழ்வுரிமைகளை மீட்கவும், வருங்காலத்தைப் பேணவும் தமிழகமெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஏதாவது ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டு எங்களோடு ஜெயிலுக்கு வாருங்கள். சேர்ந்து படிப்போம். பட்டறிவும், பாங்கான தகுதிகளும் பெற்ற பிறகு அரசியலுக்கு வாருங்கள். தங்களை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால் சினிமாப் புகழை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, பல்லக்குத்தூக்கிகள் துணையோடு தலைவராக எத்தனித்தால், தங்களை கீழேத் தள்ள என்னாலான அனைத்தையும் செய்ய நான் உறுதி பூணுகிறேன். தங்களின் பிரபலம், பணபலம், படைபலத்தில் ஒரு விழுக்காடுகூட எனக்குக் கிடையாதுதான்.
ஆனால் தமிழன் எனும் செருக்கும், தமிழினம் காக்க விரும்பும் அடிவயிற்று நெருப்பும் நிறையவே இருக்கின்றன.”
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.
தமிழினத்தின் முதல் எதிரி சினிமா என்பது சரியான பார்வையல்ல. தமிழர்களுக்குச் சினிமாவைச் சரியாக அனுகத் தெரியவில்லை என்பதுதான் சரியாகும். சினிமா என்பது ஒரு அத்தியாவசிய ஊடகம். சினிமா மூலமாக நன்மையடையத் தெரியா இனமாக தமிழர்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். சினிமாவை ஆக்கபூர்வமானதாக்கத் தெரியாதவர்கள், அதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாதவர்களாக இருப்பது நமது பலவீனமே.
(தேவைப்பட்டால் விரிவாக இது குறித்து பேசுவேன்)
சுப.உதயகுமாரன் அருமையான கருத்து!,, அதாவது ரஜினி வேலையின் நிமித்தமாக தமிழ் நாட்டுக்கு பிழைக்க வந்தார் ,என்ன வேலை ? நடிப்பு .எந்த நிறுவனத்தில் ? சினிமா என்னும் நிறுவனத்தில் .ஆகா நடிப்பு ஒரு தொழில் உண்மைதானே ,அந்த நடிப்பில் உழைத்து முன்னேறியது தப்பில்லை தானே .அரசியலில் முன்னேறவில்லை அல்லவா ?என்றைக்காவது அவர் அரசியலுக்கு வர போகிறார் என்று அவர் வாயாலே சொன்னதுண்டா ? எனக்கு தெரிந்து இல்லவே இல்லை .எங்களுக்கு வேண்டியது ரஞ்சினி நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் .அரசியல் இவருக்கு வேண்டாம் .அப்படியே அரசியலுக்கு வந்தால் தமிழன் இவரை இரட்டை வேடம் போட்டே இவர் பெயரை கெடுத்து விடுவான் .இவரை அரசியலுக்கு யார்ர் இழுக்கிறார்கள் ? சுப.உதயகுமாரன்” உனக்கு தெரியாதா ? சரி நீ என்ன காங்கிரஸ் கட்சி காரரா ? ரஜினிக்கு அறிவுரை சொல்ல ?.யாரு இந்த MR ராதா ? யாரு இவன் ?(“நீங்கப் பாக்குறீங்க. அக்ட் நல்லா செய்றோம். சந்தோசப்பட்டுக்கிட்டுப் போங்கோ. கோவிலுக்குள் போறீங்கோ, சாமியைக் கும்பிடுங்கோ, மரியாதையா வெளியே வாங்கோ. சாமிகிட்டேயே உக்காந்துக்கிட்டு குடும்பம் நடத்தாதீங்க. நல்லாருக்காது.) இப்படி சொன்னவன் நல்லவனா ? பணத்துக்காக MGR ரின் கொள்கையையும் .டுப்பாக்கில் சுட்டவன் இவன் ,இவன் தமிழன் அந்த காலத்திலேயே வன்முறையை தூண்டி விட்டவன் .இதுவெல்லாம் போகட்டும் தமிழ் நாட்டி ரஜினி ஆளக்கூடாது ,அப்படியே ஆண்டாள் இவர் பெயர் கெட்டுவிடும் னாக்களும் விரும்ப மாட்டோம் .அப்படியே ஒரு தமிழன் தமிழ் நாட்டை ஆண்டாள் ஏன்னா நடக்கும் தெரியுமா ,ஒட்டு மொத்த தமிழனையும் ராஜப்க்சாவிடும் கூட்டி விட்டு கை கொட்டி சிரிப்பான் .தமிழனுக்குல்லேயே குழிபறிக்கும் எண்ணம் கொண்டவன் தமிழன் .யாரு மாதிரி தெரியுமா? ,தமிழ் கொலைஞன் கேடுகெட்ட கருணா — தி மாதிரி .இன்னும் உதாரணம் இருக்கு ? மலேசியாவுக்கு வந்து பாருங்கள் ,கதை கதையா சொல்லுங்க ஏழ்மையான மக்கள் !? இங்கே ஒரு சாதனை தலைவன் ,பழைய டீசல் வண்டி ஒருத்தன் இருந்தான் இவன்பும் தமிழன்தான் 25 வருசமா தமிழனை உம்நோவுக்கு கூடி கொடுத்தவன் என்று .சுப.உதயகுமாரன் இது இனவெறிதான் ,இப்படிதான் மலேசியாவிலும் சொல்லுவானுங்க மலாயக்கார்கள் எல்லாம் இன வெறி பிடித்தவர்கள் என்று ஆனால் முழுக்க முழுக்க நம்ம தமிழர்கள்தான் இன வெறியிலே ஊரிப்போனவணுங்க ,இவர்களுக்கு புத்திக்கு சரியான பாடம் கற்று கொடுத்தவர் அதிபர் ராஜபக்சா .சுப.உதயகுமாரன்,அவர்களே ,,பேச்சில் தான் வீரம் ,தொடிளை ஆட்டி விட்டு கிள்ளியும் விட்டு வேடிக்கை பார்ப்பதி சூப்பரோ சூப்பர் .இந்தியாவில் சுத்த தமிழனுடைய மறு பானுவை சோதித்து கடந்த காலத்துக்கு போயி ஆராய்ச்சி பண்ணி பாருங்க தெரியும் .சுப.உதயகுமாரன் அவர்களே ,USA ஹோலிவூட்டில் நடிக்கும் 75 சதவேகிதாம் வேறு நாட்டில் இருந்து வந்தவர்கள் ,அங்கே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகுரார்கள் ,அங்கே இப்படியா அநாகரீகமா நடிகர்களை விமர்சிக்கிறார்கள் ?? உங்க தமிழ் நாட்டில் தான் இல்லாத அதிசயங்கள் எல்லாம் நடக்கும் .அமெரிக்கவிளும்தான் நடிகர்களை தூக்கி வச்சி ஆடுகிறார்கள் ,MJ காக உயிரே கொடுக்கிறார்கள் .தமிழனுக்கு மட்டும் என்ன நோவுதாம் .சுப.உதயகுமாரன் அவர்களே இருந்தாலும் நீங்கள் நாகரீகமா எழுதி இருக்கிறீர்கள் நன்றி ,மலேசிய நாட்டு ஒரு சில தமிழனுங்க மாதிரி இல்லாமல் நாகரீகமாக் நடந்து கொண்டீர்கள் ,வால்துக்ககுள் ,கவலை வேண்டாம் என் தலைவர் ரஜினி ஒரு போதும் தமிழனை நம்பி அரசியல் களத்தில் இறங்க மாட்டார் .தமிழனை நம்பினோர் கை விடப்படுவார்கள் ,பிற இனத்தை நம்புங்கள் கொஞ்சமாவது திங்கிறதுக்கு எலும்பாவது மிஞ்சும் .
டேய் முட்டாபயல்கள சினிமா ஒரு போலுதுபோக்குடா மடையுனுங்க்கள
சுப.உதயகுமாரன் அவர்களே இந்த கடிதத்தை மோடி இருக்கானே அவனுக்கு எழுதுங்கள்
தமிழ் நாட்டில் சினிமாவே தமிழனுக்கு முதல் எதிரி என்பது உண்மையே ! தமிழ் மொழி கொலை , மதுபானம் , புகைப்பது, அதிகமாக இப்பொழுது திரையில் காட்டுகிறார்கள் ! ஒரு வருடத்துக்கு முன்பு தமிழ் திரைப்பட கவிஞரை விஸ்கி, பிராந்தி, தொடர்பான பாடலை எழுதி கொடுக்க சொல்லி நச்சரித்தாராம் ஒரு இயக்குனர் ! இப்படிபட்ட படங்களை பார்ப்பதால் இளைஞர்களின் எண்ணம் செயல் என்னவாகும் என்று நாம் சிந்திக்கவேண்டும் ! சினிமா துறையில் இருப்பவர்கள் பணமே குறிகோளாக இல்லாமல் சமூக சிந்தனையும் வேண்டும் ! ரஜினி அரசியலுக்கு வந்து பெயரை கெடுக்க மாட்டார் என்று நம்புவோம் !
அட முள்ளமாரி, முடிச்சவிக்கிகளா! இந்த மந்திரவாதி என்ன கும்பகர்ணம் போட்டாலும் பருப்பு வேகாதுலே? (இப்லிஸ் பெஹெ)
தமிழர் நந்த அவர்ககளே நன்றி ,அருமையாகவும் பண்பாகவும் உங்கள் கருத்தை சொன்னதற்கு எனது நன்றி .மரியாதை உங்களுக்கு எப்பொழுதும் உண்டு .
அரசியல் லாபத்திற்காக போராடும் BJPயிடம் தமிழனின் உரிமைகளை அடகு வைக்காதீர்! தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
ரஜினிக்கு பெரிய ஆப்பு காத்திருக்கு,
ராஜபஜ்ஜாவை படம் படிதுகொடுதான் என்று….குறைகிறது