இந்திய, பாகிஸ்தான் அதிகாரிகள் ஆலோசனை

india-pakistan-flag_0எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்திய, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தொலைபேசி வழியாக செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.

அப்போது, பாகிஸ்தான் படையினரின் கடுமையான தாக்குதல்களை, கடந்த இரண்டு வாரங்களாக எதிர்த்துப் போராடியதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து, இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், காரணமின்றி இந்தியா தாக்குதல் நடத்தி வருவதாக இந்தியாவிடம் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு, எல்லைப் பகுதியில் சிறிது நேரம் அமைதி நீடித்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் செவ்வாய்க்கிழமை மீண்டும் இரு முறை தாக்குதல் நடத்தினர். இதில், பெண் ஒருவர் காயம் அடைந்தார்.

28,000 பேர் இடமாற்றம்: இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் தாக்குதல் காரணமாக, ஜம்மு-காஷ்மீரின் எல்லையோரத்தில் வசித்த 28,000 கிராம மக்கள் தாற்காலிக நிவாரண முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக அந்த மாநில அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

TAGS: