சேதுசமுத்திர திட்டத்துக்கு பதிலாக வேறு பாதை அமைக்க முயற்சி

sethu_suththita _thiddamசேது சமுத்திர திட்டம் கைவிடப்பட்டு அதற்கு பதிலாக இராமர் பாலத்தை சேதப்படுத்தாத புதிய கடற்பாதையொன்றை உருவாக்குவதற்கு இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படுத்தாத புதிய கடற்பாதையொன்றுக்கு இந்திய மத்திய அமைச்சரவை விரைவில் அனுமதியளிக்க உள்ளதென்றும் இந்திய செய்தித்தாளொன்று தெரிவித்துள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

சேது சமுத்திர திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இராமர்பாலம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையே கடும் கருத்துவேறுபாடுகள் நிலவிவந்தன. இந்த நிலையில் தற்போது புதிய பாதைத் திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இராமர் அணை அழிக்கப்படுவது குறித்து சூழலியலாளர்களும் கவலை வெளியிட்டு வருகின்றனர். இந்திய உச்ச நீதிமன்றமும் இந்தத் திட்டத்துக்கு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் இராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படாத வகையில், புதிய கடற்பாதை ஒன்றை அமைப்பது குறித்து அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்படும் என அமைச்சரவை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: