ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கோரினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிடைக்காமல் செய்வேன்!

subramaniyan_002சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பின்படி பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதா, ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இம்மனு மீதான விசாரணை நாளைக்கு வருகிறது.  விசாரணையின் முதல் நாளே ஜாமீன் கிடைக்குமா? அல்லது தள்ளிப்போகுமா என்று கேள்வி இருந்தது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு குறித்து முதன் முதலில் வழக்கு தொடுத்த சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.   அவர் தனது மனுவில்,  ‘’ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து மனுதாரர் என்பதால் என்னுடைய கருத்தையும் கேட்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கோரினால்  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிடைக்காமல் செய்வேன் என்று சொல்லிவந்த சுப்பிரமணியசாமி, அதன்படியே இன்று புதிய மனுவையும் தாக்கல் செய்துவிட்டார்.

சுப்பிரமணியசாமியின் இந்த புதிய மனுவால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

TAGS: