ஜெயலலிதாவின் உடல்நிலை கருதியே ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: சுப்ரமணியசாமி

sumபுதுடெல்லி, அக்.17- சொத்துக் குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. ஜெயலலிதாவுடன் இந்த வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும், இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவருமான சுப்ரமணியசாமி, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து அவர் கூறும்போது, ஜெயலலிதாவின் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் கோரிய காரணத்தினாலேயே ஜாமீனுக்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார்.

மேலும், தமிழகத்தில் வன்முறைகள் நிகழ்வதாக தான் அறிக்கை அளித்தாலே ஜாமீனை ரத்து செய்வது பற்றி பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்ததாகவும் சுப்பிரமணியசாமி கூறினார்.

TAGS: