சேலம், அக். 20- தமிழ் வீரன் வீரப்பன் கடந்த 2004 ஆம் ஆண்டு சிறப்பு அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட அவரது உடல் மனைவி முத்துலட்சுமியிடம் வழங்கப்பட்டு பின்னர் சேலம் மாவட்டத்தில் உள்ள மூலக்காட்டில் புதைக்கப்பட்டது.
வீரப்பனின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவனது சமாதியில் அஞ்சலி செலுத்திய முத்துலட்சுமி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், தனது கணவரின் நினைவை போற்றும் வகையில் அவருக்கு நினைவு மண்டபம் மற்றும் நினைவுத்தூண் அமைக்க திட்டமிட்டதாக தெரிவித்தார். ஆனால் எதிர்பாராத விதமாக கர்நாடக போலீசாரால் தான் கைது செய்யப்பட்டதால் அது முடியாமல் போனதாக அவர் கூறினார். எனினும் விரைவில் தனது கனவை பூர்த்தி செய்ய உள்ளதாக முத்துலட்சுமி கூறியுள்ளார்.
வீரப்பனின் 10வது நினைவு தினத்தையொட்டி சுமார் 300 பேர் அவனது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் வீரன்
செம்பருத்தி இணையம் திருட்டு திராவிட ,பார்பன உடகம்போல் செயல்படக்கூடாது .
ஆக்கிரமிப்பாளர்கள் பலவாறு பொய்யும் புரட்டும் கூறுவார்கள் ..
அந்த செய்திய அப்படியே பிரதியெடுத்து போடலாமா ?
துரோகத்தால் கொல்லப்பட்ட தமிழின வீரர் வீரப்பன் !! வீர வணக்கம் மாவீரன் வீரப்பன் அவர்களுக்கு !!
மாவீரன் வீரப்பன் அவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள் :-
கோரிக்கை 1: காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்கு முன்பு, வி.பி.சிங் காலத்தில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தின்இடைக்காலத் தீர்ப்பில் கூறியுள்ளபடி 205 டி.எம்.சி. காவிரி நீரை உடனடியாக தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும். எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினையில்,எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது.
கோரிக்கை 2: 1991-ம் ஆண்டு காவிரிக் கலவரத்தில் இறந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும்.அத்துடன், கர்நாடகத் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் தரப்பட வேண்டும்.
கோரிக்கை 3: கர்நாடகத்தில் கன்னடர்களுக்கு அடுத்து அதிகம் உள்ளது தமிழர்கள்தான். எனவே தமிழை கூடுதல் ஆட்சி மொழியாக கர்நாடக அரசுஅறிவிக்க வேண்டும்.
கோரிக்கை 4: பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைத் திறக்க கர்நாடக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோரிக்கை 5: தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில அதிரடிப்படைகள் செய்த கொடுமைகள் குறித்து விசாரிக்க நீதிபதி சதாசிவா கமிஷன் அமைக்கப்பட்டது.இருப்பினும், இந்த கமிஷன் நியமனத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையை நீக்க கர்நாடக அரசு விரைவானநடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கமிஷன் அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும். பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இதை வெளியிட வேண்டும்.மேலும், அதிரடிப்படை நடவடிக்கையின்போது உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ. 10 லட்சமும், கற்பழிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 10லட்சமும் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பிறருக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். இந்தக் குற்றங்களுக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீதான புகார் நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.
கோரிக்கை 6: கர்நாடக ஜெயில்களில் தடா சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவிக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
கோரிக்கை 7: கொல்லப்பட்ட 9 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் குடும்பத்தினருக்கு போதுமான நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
கோரிக்கை 8: பச்சைத் தேயிலை பறிப்புக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச விலையை உடனடியாக ரூ. 15 ஆக அதிகரிக்க வேண்டும்.
கோரிக்கை 9: தமிழ்நாடு ஜெயில்களில் உள்ள 5 பேரை விடுவிக்க வேண்டும்.
கோரிக்கை 10: தமிழ்நாட்டில் மாஞ்சோலைத் தொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முன்பு கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள காபிமற்றும் டீ எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக் கூலியாக ரூ. 150 வழங்க வேண்டும்.
துரோகத்தால் கொல்லப்பட்ட தமிழின வீரர் வீரப்பன் !! வீர வணக்கம் மாவீரன் வீரப்பன் அவர்களுக்கு !!
அதென்ன சந்தன கடத்தல் மன்னன்!?
கடத்தல் சந்தனக்கட்டைய யாருகிட்ட விட்பனைசெய்தார்?
வாங்கியவன் எவனும் சிக்கவில்லையா ?
தமிழன் நிலத்தில் தமிழன் ஆளும்போது தியாகிகளுக்கு உரிய மரியாதை வழங்கப்படும் . சம்பந்தமே இல்லாம கன்னட நடிகன் சோபன் பாபுக்கு தமிழர் மண்ணில் சிலை !! இதெல்லாம் திராவிட சாதனை பட்டியல்
எல்லைகாத்த குலசாமி வீரப்பனாருக்கு தன்மான தமிழர்களின் வீர வணக்கம்
தலைப்பை மாற்றியதற்கு நன்றி செம்பருத்தி ஆசிரிய பெருமக்களுக்கு 🙂
மதுரை வீரன்,முனியாண்டி சாமி வரிசையில் இப்பொழுது ஆட்டுக் கெடாய் மீசை வீரப்பனும் சேர்ந்துக் கொண்டார்.நாளை வருடாந்திர பூசை,உற்சவம் எல்லாம் அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
அமரர் வீரப்பன் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்ற வேட்கையைத் தாங்கியவராகவும் வாழ்ந்தார். திராவிடங்களின் அசைக்கமுடியா ஆளுமைக்கு உட்பட்ட தமிழர் நாட்டுக்கு அவர் ஒரு ரோபின் ஹூட். எங்குமே அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ரோபின் ஹூட்களை ஏனோ பிடிப்பதில்லை..!!! அவர்களின் மக்கள் நலன் போராட்டம் இவர்களின் குறுக்கு வழியை மறிப்பதாலா.?? வனம்வாழ் பழங்குடி மக்களுக்கும், அதிகார ஆணவத்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட சாமானியர்களுக்கும் இவர் ஒரு கவசமாக இருந்தார்.
திருடனுக்கு கோவில் , உலகம் எங்கடா போறது,