விஜய் படத்திற்கு வரவேற்பு: கேரளாவில் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கத்தி பட போஸ்டர்கள்

கேரளாவில் மற்ற படங்களுக்கு இல்லாத தனி வரவேற்பு விஜய் படங்களுக்கு உண்டு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இதை அவருடைய ஒவ்வொரு படங்களும் நிரூபித்துள்ளது. தற்போது இந்தப் பட்டியலில் கத்தி படமும் இடம்பெறுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் கத்தி.

இந்தப் படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. தமிழகத்தை போன்றே கேரளாவிலும் கத்தி படம் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. அங்கு மட்டும் கிட்டதட்ட 200 தியேட்டர்களில் வெளியாகிறதாம். இந்நிலையில் கேரளாவில் கத்தி படம் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஓடும் ரயில்களிலும், பஸ்களிலும் விஜய் நடித்திருக்கும் கத்தி படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கேரளாவில் இந்த அளவிற்கு ஒரு தமிழ் படம் விளம்பரம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இது விஜய் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.