கேரளா, தமிழகத்தில் தற்கொலை அதிகம்: பீகார், உ.பி.,யில் மிக குறைவு

020212-health-black-men-suicideபுதுடில்லி : உலகிலேயே, தற்கொலை அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. அதிலும், கேரளா, தமிழகம், ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் தான், நாட்டிலேயே அதிக தற்கொலைகள் நடப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கு இடம் : உலக சுகாதார நிறுவனம், தற்கொலைகள் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: வளர்ச்சி குறைந்த நாடுகளை விட, வளர்ச்சி அடைந்த நாடுகளில் தான், அதிக தற்கொலைகள் நிகழ்கின்றன.

தற்கொலைகள் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுடன், இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில், 1 லட்சம் மக்கள் தொகையில், 20 பேர் தற்கொலை செய்கின்றனர். அமெரிக்காவில், ஒரு லட்சம் பேருக்கு, 13 பேரும், பிரிட்டனில், ஆறு பேரும் தற்கொலை மூலம் உயிரை மாய்த்து கொள்கின்றனர். இந்தியாவிலும், வளர்ச்சி குறைந்த மாநிலங்களை விட, வளர்ச்சி அடைந்த தென் மாநிலங்களில் தான், தற்கொலைகள் அதிகம் நடக்கின்றன.

இந்த பட்டியலில், ஒரு லட்சம் பேருக்கு, 25 பேர் என்ற எண்ணிக்கையுடன், கேரளா முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக, தமிழகத்தில், ஒரு லட்சம் பேருக்கு, 22 பேரும், ஒருங்கிணைந்த ஆந்திராவில், 16 பேரும், கர்நாடகாவில், 17 பேரும் தற்கொலையால் இறக்கின்றனர். கோவாவில், ஒரு லட்சம் பேருக்கு, 22 பேர் இறக்கின்றனர். நாட்டிலேயே மிக குறைவாக, பீகாரில், ஒரு லட்சம் பேருக்கு, 0.97 பேர் தான் தற்கொலை செய்து கொள்கின்றனர். உ.பி.,யில், இரண்டு பேரும், தலைநகர் டில்லியில், 11 பேரும் தற்கொலை களால் இறக்கின்றனர்.
எட்டு லட்சம் : ஒட்டுமொத்தமாக, உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும், 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், மிக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: